நடிகர்களுக்கு ஜெயில்னா… அரசியல்வாதிகளுக்கு என்ன..? ராதாரவி ஆவேசம்..!


நடிகர்களுக்கு ஜெயில்னா… அரசியல்வாதிகளுக்கு என்ன..? ராதாரவி ஆவேசம்..!

மத்திய அரசு விரைவில் அறிவிக்கவுள்ள ஒரு அறிவிப்பால் விளம்பரங்களில் நடித்து வரும் மாடல்கள் மற்றும் நடிகர்கள் கதிகலங்கியுள்ளனர்.

நுகர்வோரை ஏமாற்றி பல விளம்பரகள் வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்ந்தால் அதில் நடிக்கும் பிரபலங்களுக்கு ரூ 50 லட்சம் அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கவுள்ளதாக மத்திய அரசு திட்டமிட்டு வருகிறதாம்.

எனவே இதுகுறித்து ராதாரவி, முன்னணி இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது…

“ஒரு விளம்பரம் உருவாக ஸ்க்ரிப்ட் ரைட்டர், இயக்குனர் மற்றும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்தான் காரணம். முக்கியமாக நிறுவனத்தின் உரிமையாளருக்குதான் அப்பொருளின் தரம் தெரியும்.

ஒரு விளம்பரத்தில் நடிக்கும் போது அந்த பொருளின் தரத்தை ஆராய்ந்து பார்ப்பது விளம்பர நடிகர்களின் வேலை அல்ல. எங்களுக்கு நடிக்க மட்டும்தான் தெரியும்.

அரசியல்வாதிகள்தான் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வருகின்றனர். சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால், அவர்களுக்கு தண்டனை வழங்க முடியுமா? என்று கூறியுள்ளார் ராதாரவி.