‘டிக்டேட்டர்’ ரீமேக்கில் அஜித்.? எதிர்பார்க்கும் ரசிகர்கள்!


‘டிக்டேட்டர்’ ரீமேக்கில் அஜித்.? எதிர்பார்க்கும் ரசிகர்கள்!

ஸ்ரீவாஸ் இயக்கி பாலகிருஷ்ணா நடித்த ‘டிக்டேட்டர்’ அண்மையில் வெளியாகியது. தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் அஞ்சலி, சோனல் சௌஹான் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரைலர் வெளியான போதே இதில் இடம்பெற்ற பன்ச் வசனங்கள் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளதால் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்யலாமா? என்ற பேச்சுவார்த்தையும் கோலிவுட்டில் எழுந்துள்ளது.

இதன் ரீமேக் உரிமையை பெற ஈராஸ் நிறுவனம் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதில் அஜித் போன்ற ஒரு மாஸ் ஹீரோ நடித்தால் படத்தின் ரீச் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறார்களாம்.

‘வேதாளம்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு மீண்டும் சிவாவுடன் இணையவிருக்கிறார் அஜித். இதனைத் தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அவர் நடிக்கலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

ஒருவேளை அஜித் ஒப்புக்கொண்டால் இப்படங்களை தொடர்ந்து டிக்டேட்டர் படம் தமிழில் உருவாக வாய்ப்பிருக்கலாம். அஜித்தின் முடிவுக்காக இப்போதே அவரது ரசிகர்கள் காத்திருக்கத் தொடங்கிவிட்டார்களாம்.