‘தலைவர்’ ரஜினிக்கு குஷ்பூ… ‘தல’ அஜித்துக்கு நயன்தாரா…!


‘தலைவர்’ ரஜினிக்கு குஷ்பூ… ‘தல’ அஜித்துக்கு நயன்தாரா…!

தன் ஆஸ்தான நாயகியான நயன்தாராவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் படம் விமர்சன ரீதியாகவும் கமர்ஷியல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் தன் அடுத்தப் படத்திற்கு தயாராகி வருகிறார். இதில் மீண்டும் விஜய் சேதுபதி, நயன்தாரா ஜோடி இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையில் அஜித்துக்காக ஒரு கதையை தயார் செய்து வைத்துள்ள விக்னேஷ் சிவன் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறார்.

ஆனால், அது தள்ளிப்போகவே தன் தோழி நயன்தாரா மூலம் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.

கிட்டதட்ட 18 வருடங்களுக்கு முன் வளரும் இயக்குனராக இருந்த சுந்தர்.சியும் ரஜினியிடம் கதை சொல்ல, குஷ்பூவின் உதவியைத்தான் நாடினார். அப்படி உருவான படம்தான் அருணாச்சலம் என்பது குறிப்பிடத்தக்கது.