மீண்டும் பழைய பாணிக்கு திரும்புவாரா அஜித்?


மீண்டும் பழைய பாணிக்கு திரும்புவாரா அஜித்?

சரண் (காதல் மன்னன்), முருகதாஸ் (தீனா), துரை (முகவரி), சரவண சுப்பையா (சிட்டிசன்), எஸ்.ஜே. சூர்யா (வாலி)…… இப்படியாக தொடர்ந்து அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வந்தவர் அஜித். திரையுலகில் தான் வளரும் நேரத்தில் எந்த ஒரு நடிகரும் செய்யத் தயங்கும் செயலை அன்றே செய்தவர் இவர். இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இயக்குனர்கள் இன்று மிக உயர்ந்த நிலையில் உள்ளனர்.

இவற்றைத் தவிர்த்து ஒரு சில படங்கள் தோல்வியடைந்ததை தொடர்ந்து பிரபல இயக்குனர்களின் படங்களில் நடிக்க தொடங்கினார். இருந்தபோதிலும் அதன்பின்னரும் ஏ.எல்.விஜய்க்கு ‘கிரீடம்’, ராஜு சுந்தரத்திற்கு ‘ஏகன்’ உள்ளிட்ட படங்களில் வாய்ப்பளித்தார். கடந்த எட்டு ஆண்டுகளாக முன்னணி இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் அஜித்.

இந்நிலையில் சமீபத்தில் ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தின் அறிமுக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், தான் ஒரு தீவிர அஜித் ரசிகர் என்றும் அவரை வைத்து படம் இயக்க வேண்டும் என்பதே தன் மிகப்பெரிய ஆசை என்று தெரிவித்துள்ளார். அஜித்துக்கு ஏற்ற கதையை ரெடி செய்து வைத்துள்ளதாகவும் கூறி வருகிறார்.

தனது எட்டு வருட இடைவெளியை கலைத்து மீண்டும் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களுக்கு வாழ்வு அளிப்பாரா அஜித் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.