மீண்டும் இணையும் என்னை அறிந்தால் ஜோடி…?


மீண்டும் இணையும் என்னை அறிந்தால் ஜோடி…?

வேதாளம் படத்தை தொடர்ந்து சிவா இயக்கத்தில் மீண்டும் நடிக்கவிருக்கிறார் அஜித்.

அனிருத் இசையமைக்க சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.

இப்படத்தில் நடிக்க, அஜித் இதுவரை பெறாத தொகையை சம்பளமாக பெறவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அஜித்தின் ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் என்னை அறிந்தால் படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்கா தற்போது பாகுபலி-2, எஸ் 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் என்பது தாங்கள் அறிந்ததே.