விஜய்யின் ‘தெறி’க்காக இணையும் ரஜினி-ஏ.ஆர். ரஹ்மான்..?


விஜய்யின் ‘தெறி’க்காக இணையும் ரஜினி-ஏ.ஆர். ரஹ்மான்..?

விஜய் நடித்து ஜி.வி. பிரகாஷ் இசையில் 50வது படமாக உருவாகியுள்ளது ‘தெறி’. அட்லி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு மனைவியாக சமந்தாவும், தோழியாக எமி ஜாக்சனும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், பிரபு, மகேந்திரன், மீனா மகள் நைனிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, தாணு தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் இசையை மார்ச் 20ம் தேதி மிகப்பிரம்மாண்டமாக சென்னையில் வெளியிடவுள்ளனர்.

கபாலி படத்தையும் தாணு தயாரித்து வருவதால் தெறி இசை விழாவில் ரஜினி கலந்து கொள்வார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இது ஜி.வி.பிரகாஷின் 50வது படம் என்பதால் அவரது உறவினரான ஏ.ஆர்.ரஹ்மானும் கலந்து கொண்டு சிறப்பிப்பார் என கூறப்படுகிறது.

இதன் இசை உரிமையை பெற புதிய நிறுவனம் ஒன்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தற்போது பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

இப்படத்தில் ராப் பாடல் உட்பட மொத்தம் ஏழு பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.