கமல்-ஏ.ஆர்.ரஹ்மான்…. ஜனநாயக கடமையை செய்வார்களா?


கமல்-ஏ.ஆர்.ரஹ்மான்…. ஜனநாயக கடமையை செய்வார்களா?

வருகின்ற மே 16ஆம் தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

எனவே, 100% வாக்காளர்களும் ஓட்டுப் போட வேண்டும் என தேர்தல் ஆணையம் பல்வேறு வகையிலும் விளம்பரங்களை செய்து வருகிறது.

இதனால் புதிதாக வாக்களிக்க இருப்பவர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், பொதுமக்களிடையே பிரபலமாக இருக்கும் கமல் மற்றும் ஏஆர் ரஹ்மான் ஆகிய இருவரும் வாக்களிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதற்கு காரணம்… தேர்தல் நாளன்று கமல் தன்னுடைய ‘சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்கா செல்லவிருக்கிறார்.

அதுபோல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மலேசியாவில் இசைக் கச்சேரி ஒன்றை அன்றைய தினத்தில் நடத்தவிருக்கிறாராம்.

ஒருவேளை இவர்கள் தங்களது பணிகளை ஒதுக்கிவிட்டு ஜனநாயக கடமையை ஆற்ற அன்றைய தினம் தமிழகத்தில் இருப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.