தனுஷின் நாயகி கீர்த்தி சுரேஷ் கனவு பலிக்குமா?


தனுஷின் நாயகி கீர்த்தி சுரேஷ் கனவு பலிக்குமா?

முன்னணி நடிகர்களுடன் ஒரு படத்திலாவது நடித்திடவேண்டும் என்று நாயகிகள் விரும்புவதே சகஜமே. அதுபோல கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் இயக்குனர்களின் படங்களிலும் நடித்திட காத்திருப்பார்கள்.

இந்நிலையில் பெரும்பாலும் பிரபுசாலமன் இயக்கும் படங்களில் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார். இவர் இயக்கிய ‘மைனா’, ‘கும்கி’, ‘கயல்’ ஆகிய மூன்று படங்களுமே இதற்கு சிறந்த உதாரணங்கள். இதில் நடித்த அமலாபால், லெஷ்மிமேனன் மற்றும் ஆனந்தி ஆகியோருக்கு அவரவர்களின் படங்கள் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

தற்போது பிரபுசாலமன் இயக்கி முடித்துள்ள படத்தில் தனுஷ் நாயகனாக நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் ஒரு நடிகையின் டச்சப் பெண்ணாக வருகிறாராம்.

மேலும் படப்பிடிப்பின்போது கீர்த்தியின் நடிப்பை பார்த்த தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர்கள் புகழ்ந்துள்ளனர். எனவே அமலா பால், லெஷ்மிமேனன், ஆனந்தி வரிசையில் தனக்கும் ஒரு ஒளிமயமான எதிர்காலம் தமிழ் சினிமாவில் காத்திருக்கும் என கனவில் இருக்கிறாராம் கீர்த்தி சுரேஷ்.

வாழ்த்துக்கள் அம்மணி.. அப்படியே ஆகட்டும்..!