பிரச்சினை வலைக்குள் சிக்கிய ரஜினிகாந்த் மீண்டு வருவாரா?


பிரச்சினை வலைக்குள் சிக்கிய ரஜினிகாந்த் மீண்டு வருவாரா?

பிரபலங்கள் என்றாலே ப்ராப்ளம்தான் என்றொரு வாக்கியம் உண்டு. அது அரசியல்வாதியாகட்டும் சினிமா ஸ்டாராகட்டும் அவருக்கான நெருக்கடிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதுவும் சூப்பர் ஸ்டார் போன்ற ஒரு பெரிய பிரபல நடிகருக்கு தொடர்ந்து இவ்வளவு பிரச்சினைகளா? என கேட்கத் தோன்றுகிறது.

‘கோச்சடையான்’ தொடங்கி ‘லிங்கா’ வரை… ரஜினியை சுற்றி தினம் தினம் புதிதாய் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கின்றன. தற்போது மீண்டும் ஒரு பிரச்சனை வெடித்துள்ளது. இந்நிலையில் மம்மூட்டி, நயன்தாரா நடித்து மலையாளத்தில்ஹிட்டடித்த ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் துரைராஜ் வாங்கியிருந்தார். இதில் நடிக்க ரஜினி தன்னிடம்விருப்பம் தெரிவித்ததாக துரைராஜ் கூறி வருகிறார்.

இதனால் ரஜினியை நம்பி அட்வான்ஸ் கொடுக்க அவர் வட்டிக்கு பணம் பெற்றாராம். ஆனால் ரஜினி தற்போது தாணு தயாரிக்கும் படத்திலும் ஷங்கரின் ‘எந்திரன்-2’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். எனவே ரஜினி தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி தயாரிப்பாளர் சங்கத்தில்புகார் செய்யவுள்ளாராம் துரைராஜ்.