சந்தோஷ் இசை ரஜினி ரசிகர்களை சந்தோஷப்படுத்துமா?


சந்தோஷ் இசை ரஜினி ரசிகர்களை சந்தோஷப்படுத்துமா?

ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’ படங்களுக்கு இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன். இவை மட்டுமல்லாமல் ‘சூதுகவ்வும்’, ‘ஜிகர்தண்டா’, ‘எனக்குள் ஒருவன்’ உள்ளிட்ட ஹிட் படங்களுக்கும் ஹிட்டமைத்து (ஸாரி) மெட்டமைத்து கொடுத்தவர் இவரே.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கும் வாய்ப்பு ரஞ்சித்துக்கு கிடைத்துள்ளதால் இப்படத்திற்கும் சந்தோஷ் நாராயணனே இசையமைப்பார் என தெரிகிறது. படத்தின் ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ள குழுவினர் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களை தேர்ந்தெடுத்து வருகின்றனர்.

சமீபகாலமாக ரஜினியின் படங்களுக்கு இசையமைத்து வருபவர் ஏ.ஆர். ரஹ்மான்தான். ‘முத்து’, ‘படையப்பா’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’ உள்ளிட்ட படங்களில் ஏ.ஆர். ரஹ்மானின் இசையும் பின்னணி இசையும் பெரிய அளவில் பேசப்பட்டது.

ரஜினி ரசிகர்களை ரஹ்மான் தன் இசையால் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது போல சந்தோஷ் நாராயணன் ரஜினி ரசிகர்களை சந்தோஷப்படுத்துவாரா என்ற சந்தேகம் தற்போது திரையுலகினரிடையே எழுந்துள்ளதாம்.