கமல் சொன்னதையே விஜய்யும் சொல்வாரா?


கமல் சொன்னதையே விஜய்யும் சொல்வாரா?

இன்றைய சினிமாவில் ஒரு புதுமை புகுத்தப்படுகிறது என்றால் அதற்கான மேக்கிங் வீடியோவை தற்போது இணையதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். சில காட்சிகள் ஹாலிவுட் படங்களில் இருந்து காப்பி செய்யப்படுவதால் அதுவும் ரசிகர்களுக்கு தெரிந்து விடுகிறது.

ஆனால் கமல் நடித்த அபூர்வ சகோதர்கள் படத்தில் குள்ள கமலின் தோற்றம் எப்படி? என்பது இன்று வரை தெரியாமலே இருந்து வருகிறது. இப்படம் வெளியாகி 25 வருடங்களை கடந்தும் இதற்கான ரகசியத்தை கமல் இன்னமும் சொல்லவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டால் ‘அந்த ரகசியம் தெரியாமலே இருக்கட்டும். தெரிந்தால் சுவாரசியம் இல்லாமல் போய்விடும்” என்பார்.

இந்நிலையில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘புலி’ படத்தில் விஜய் குள்ளராக நடித்துள்ளார். படத்தின் பாடல் வரிகளும் அதை நிரூபித்துள்ளன. இந்த கேரக்டர் காமெடி கலந்து இருக்குமாம். டைம் மிஷினைக் கொண்டு கிட்டதட்ட 400 வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்திற்கு விஜய் செல்வதாக கூறப்படுகிறது.

‘புலி’ படம் வெளியான பிறகு விஜய் எப்படி குள்ளராக நடித்தார்? என்று கேட்டால் அவரும் கமலை போல் ரகசியம் காப்பாரா? அல்லது அந்த டெக்னிக் பற்றி வாய் திறப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.