அரசியல் வேட்டையில் சிக்கி கொள்வாரா ‘புலி’ விஜய்!


அரசியல் வேட்டையில் சிக்கி கொள்வாரா ‘புலி’ விஜய்!

விஜய் நடித்துள்ள ‘புலி’ வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீஸர், பர்ஸ்ட் லுக், பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பார்வையாளர்களின் எண்ணிக்கையில் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் இந்த ட்ரைலரில் இடம் பெற்றுள்ள சில வாக்கியங்கள் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த ட்ரைலரில் In A Land Ruled By Darkness… There is only one Ray of Hope … (மக்கள் இருளான ஆட்சி நடைபெறும் நாட்டில் வசிக்கிறார்கள். அவர்களின் ஒரே ஒரு நம்பிக்கை) என்ற வாசகம் வருகிறது. இது தற்போது நடைபெற்று வரும் ஆட்சியை குறிப்பதாக ஒரு கருத்து உலா வருகிறது. இதனால் ஆளுங்கட்சியை சேர்ந்த புள்ளிகள் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது.

இதற்கு முன்பு விஜய் நடித்த ‘தலைவா’ படத்திற்கு ஏற்பட்ட அரசியல் பிரச்சினை உலகம் அறிந்ததே. ‘தலைவா’ படத்தலைப்பின் கீழ் TIME TO LEAD (தலைமை ஏற்பதற்கான தருணம்) எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பின்னர் அந்த வாக்கியங்கள் நீக்கப்பட்ட பிறகே படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

எனவே இம்முறையும் விஜய் படத்திற்கு பிரச்சினை வருமா என்ற கலக்கத்தில் உள்ளனர் அவரது ரசிகர்கள்.