ரஜினியை சந்தித்தார் பாலகுமாரன்… மீண்டும் ஒரு பாட்ஷா…-?


ரஜினியை சந்தித்தார் பாலகுமாரன்… மீண்டும் ஒரு பாட்ஷா…-?

பாக்யராஜ், ஷோபனா நடித்து மாபெரும் ஹிட்டித்த இது நம்ம ஆளு படத்தை இயக்கியவர் எழுத்தாளர் பாலகுமாரன்.

இவரது வரிகளில் பல புத்தகங்கள் உருவாகியுள்ளன.

மேலும் ஷங்கரின் ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ் உள்ளிட்ட படங்களுக்கு டயலாக் எழுதியுள்ளார்.

ரஜினிக்கு திருப்புமுனையை உண்டாக்கிய பாட்ஷா படத்திற்கு இவர்தான் டயலாக் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விஷ்ணுவர்தன் இயக்கவுள்ள அஜித் படத்திற்கு பாலகுமாரன் கதை வசனம் எழுதி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரஜினிகாந்தை தனது மனைவியுடன் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார் பாலகுமாரன்.

ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் தான் எழுதிய புத்தகங்களை ரஜினிக்கு பரிசாக அளித்துள்ளார் எழுத்தாளர்.

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றாலும் மீண்டும் பாட்ஷா உருவாகுமா..? என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.