அஜித்தின் என்னை அறிந்தால் – தியேட்டர் வெளியீடு விவரம்


அஜித்தின் என்னை அறிந்தால் – தியேட்டர் வெளியீடு விவரம்

பெரிய எதிர்பார்ப்புகளோடு வரவிருக்கும் படம் அஜித்தின் என்னை அறிந்தால். பொங்கல் அன்று வெளியாகவிருந்த இப்படம் தற்போதுதான் வெளியாகவிருக்கிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்துடன், அருண் விஜய், அனுஷ்கா, த்ரிஷா, மற்றும் விவேக் நடித்துள்ள இப்படம் பிப்ரவரி 5ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகிறது.

தமிழகத்தில் மட்டும் இப்படம் 450க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. தியேட்டர் வெளியீடு குறித்த விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது,

சென்னை சிட்டி – எம்.கே.என்டர்பிரைசஸ் – 50க்கும் மேற்பட்ட தியேட்டர்கள்
செங்கல்பட்டு – மன்னன் ஃபிலிம்ஸ் – 115 க்கும் மேற்பட்ட தியேட்டர்கள்
வட மற்றும் தென் ஆற்காடு – மன்னன் ஃபிலிம்ஸ் – 50க்கும் மேற்பட்ட தியேட்டர்கள்
கோயம்புத்தூர் – எம்.கே.என்டர்பிரைசஸ் – 70க்கும் மேற்பட்ட தியேட்டர்கள்
திருச்சி, தஞ்சாவூர் – பரதன் ஃபிலிம்ஸ் – 40க்கும் மேற்பட்ட தியேட்டர்கள்
திருநெல்வேலி & ரூபன் ஃபிலிம்ஸ் – 10க்கும் மேற்பட்ட தியேட்டர்கள்
சேலம் – ஜி ஃபிலிம்ஸ் – 55க்கும் மேற்பட்ட தியேட்டர்கள்
மதுரை – அழகர் ஃபிலிம்ஸ் – 30க்கும் மேற்பட்ட தியேட்டர்கள்

என்னை அறிந்தால் படம் வெளியானால் தியேட்டர்களின் குண்டு வைப்போம் என்ற ஒரு  மிரட்டல் கடிதம் வந்திருந்ததும், அதற்கு அஜித் ரசிகர்கள் ‘குண்டு வெடிப்பது என்பது உண்மை என்றால், அஜித்திற்காக உயிரையும் கொடுப்போம்’ என்று கூறியதும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.