நடிகர் ரஜினியை தெரியும். டைரக்டர் ரஜினியை தெரியுமா?


நடிகர் ரஜினியை தெரியும். டைரக்டர் ரஜினியை தெரியுமா?

இசையின் ராஜாவுக்கு சமீபத்தில் மும்பையில் பாராட்டு விழா நடந்தது. அன்னக்கிளி முதல் ஷமிதாப் வரை தன் இசைப்பயணத்தை தொடரும் இளையராஜா சமீபத்தில் ஒரு பேட்டியளித்தார். அதில் தன் இசை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில், ரஜினியிடம் பணிபுரிந்தது பற்றி கேட்டதற்கு… “ரஜினி நன்றாக திரைக்கதை மற்றும் கதைகள் எழுதும் ஆற்றல் உள்ளவர். டைரக்டர் ஆவதற்கு தகுதியானவர். கதை சொல்வதில் வல்லவர். ஆனால் அவர் தேர்ந்தெடுத்து நடிப்பு தொழில். அது அவரை வேறு பாதைக்கு கொண்டு சென்றுவிட்டது.

ஒரு முறை ரஜினியிடம் உங்கள் படத்துக்கான திரைக்கதையை நீங்களே ஏன் எழுதக்கூடாது என்று கேட்டேன். அதற்கு “ஸ்வாமி. அது வேறு சாமி” என்று கூறி விட்டார்’ என்றார் இளையராஜா.