‘நீங்க போற ரூட் சரியா இருக்கு. மாற்றிக் கொள்ளாதீர்கள்’ சிவகார்த்திக்கு அஜித் அட்வைஸ்!


‘நீங்க போற ரூட் சரியா இருக்கு. மாற்றிக் கொள்ளாதீர்கள்’ சிவகார்த்திக்கு அஜித் அட்வைஸ்!

கடந்த வாரம் சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை படம் வெளியானது. அனைத்து சென்டர்களிலும் படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு முன் வெளியான அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலக்கதையும், இப்படத்தின் கதையும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் குறித்த ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் ‘காக்கி சட்டை’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக ஒரு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்தார் சிவகார்த்திகேயன். அப்போது அவரிடம் படம் குறித்தும் தயாரிப்பாளர்  மற்றும் படக்குழுவினர் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டது.

அப்போது அஜித் பற்றி அவரிடம் கேட்கப்பட்ட போது…  ‘மான்கராத்தே படம் ரிலீஸான சில தினங்களில் அஜித் சாரை பார்க்க அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். சுமார் 4 மணி நேரம் அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். நிறைய விஷயங்கள் குறித்து பேசினோம்.

என்னை வெகுவாக பாராட்டினார் அஜித் சார். அப்போது, “சிவா நீங்க சரியான ரூட்ல போய்ட்டு இருக்கீங்க. யாருக்காகவும் உங்களை மாற்றி கொள்ளாதீர்கள்- என்று அட்வைஸ் செய்தார்” இவ்வாறு கூறினார்.