பெண்ணுக்காக வாலிபரை தாக்கிய சூர்யா… வாலிபர் தற்கொலை முயற்சி..?


பெண்ணுக்காக வாலிபரை தாக்கிய சூர்யா… வாலிபர் தற்கொலை முயற்சி..?

சென்னையைச் சேர்ந்தவர் பிரேம் குமார் (வயது 22) என்பவர் தனது பைக்கில் நண்பருடன் அடையாறு மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தார்.

இவர் சுங்கத்துறை கால்பந்து அணிக்காக விளையாடி வரும் கால்பந்து வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது அவரது முன் சென்ற ஒரு கார் திடீரென பிரேக் போட்டதால்,  இவரது பைக் கார் மீது எதிர்பாரா விதமாக மோதியுள்ளது.

எனவே, காரை ஓட்டி வந்த பெண்ணுக்கும் பிரேம் குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அவ்வழியாக வந்த நடிகர் சூர்யா, காரை விட்டு இறங்கி என்ன பிரச்சினை என்று விசாரித்திருக்கிறார்.

அப்போது பிரேம் குமாரை சூர்யா அறைந்ததால், அவர் கீழே விழுந்து விட்டார். இதை அங்கிருந்த பலரும் செல்போனில் படம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பின்பு கூட்டம் கூடவே சூர்யா அங்கிருந்து சென்றுவிட்டாராம்.

தாக்கப்பட்ட பிரேம் குமார் முதலுதவி எடுத்துக் கொண்டு சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் சூர்யா மீது புகார் கொடுத்துள்ளார்.

இச்சம்பவத்திற்கு சம்பந்தமே இல்லாத சூர்யா என்னை பொது இடத்தில் தாக்கினார்.

suriya complaint boy

இதனால் அவமானப்பட்டுள்ள நான் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு சூர்யாதான் காரணம்.

எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து சூர்யா கூறியுள்ளதாவது… அந்த பெண்ணிடம் தகராறு செய்த வாலிபரை தட்டிக் கேட்டுவிட்டு, பெண்ணை மீட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.