கனடாவில் யுவன் சங்கர் ராஜாவின் மியூசிக்கல் நைட்!


கனடாவில் யுவன் சங்கர் ராஜாவின் மியூசிக்கல் நைட்!

வருகிற ஜூலை 26ஆம் தேதி கனடா நாட்டில் பேர்க் கிரவுண்ட்டில் யுவன் சங்கர் ராஜாவின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஐ நைட் எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் இந்நிகழ்ச்சிக்கு ‘யுவன் மியூசிக்கல் நைட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பிரபல தமிழ் நட்சத்திரங்கள் பங்கேற்கவுள்ளனர். நடிகர்கள் ஆர்யா, அருண்விஜய், ஜெயம்ரவி, விக்ரம் பிரபு, சித்தார்த் மற்றும் நடிகைகள் மீனா, இனியா, அக்ஷரா, சுஜாவருணி மற்றும் இயக்குனர்கள் ஐஸ்வர்யா தனுஷ், வெங்கட்பிரபு உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். மேலும் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க உள்ளனர்.

இவ்விழாவுக்கு ஒரு நாள் முன்னதாக அதாவது 25ஆம் தேதி தென்னிந்திய திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் செலபிரிட்டி பேட்மின்டன் லீக் போட்டி ஒன்றும் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் நான்கு அணிகள் பங்கேற்கும். இறுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்க இருக்கின்றனர் விழா அமைப்பினர்.