நண்பர்கள் நற்பணி மன்றம் – முன்னோட்டம்


நண்பர்கள் நற்பணி மன்றம் – முன்னோட்டம்

ஸ்ரீ அண்ணாமலையார் மூவீஸ் என்ற பட நிறுவனம் சரர்பாக சி.மாதையன் தயாரிக்கும் படம் “நண்பர்கள் நற்பணி மன்றம்”. தலைப்பில் நட்பு இருப்பதால் இது வெறும் நட்பு படம் என்று நினைத்து விடாதீர்கள். நட்புடன் காதலையும் கலந்து சொல்லியிருக்கிறோம் என்கிறார் இயக்குனர்.

இந்த படத்தில் செங்குட்டுவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அக்ஷயா நடிக்கிறார் மற்றும் கே.பிரபாகரன், இமான் அண்ணாச்சி, ஆடுகளம் நரேன், சிங்கம்புலி, நான்கடவுள் ராஜேந்திரன், ரவிமரியா, முத்துகாளை, மகேந்திரன், நெல்லை சிவா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

மற்ற கலைஞர்கள்

ஒளிப்பதிவு   –   செல்வா.ஆர்.எஸ்

இசை               –    ஸ்ரீகாந்த்தேவா

பாடல்கள்     –    நா.முத்துகுமார், யுகபாரதி,

கலை               –  பத்மநாபகதிர்

எடிட்டிங்        –  லான்சிமோகன்

நடனம்           –  சஞ்சீவ்கண்ணா

ஸ்டன்ட்        –  மிரட்டல்செல்வா

தயாரிப்பு நிர்வாகம்  –  ரஞ்சித், பழனியப்பன்

நிர்வாக தயாரிப்பு    –   கமரன்

தயாரிப்பு     – C.மாதையன்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – ராதாபாரதி.

படம் பற்றி இயக்குனர் ராதாபாரதி கூறியதாவது…

“இது நட்பு, காதல் இரண்டையும் மையப்படுத்தி உருவாகியுள்ள படம். ஒரு கலகலப்பான படமாக நண்பர்கள் நற்பணி மன்றம் இருக்கும்.  இப்படம் திரைக்கு வர தயாராக உள்ளது” என்றார்.

Related