சிம்புவுக்காக காத்திருக்கும் ரஜினி, விஜய், அஜித் ரசிகர்கள்


சிம்புவுக்காக காத்திருக்கும் ரஜினி, விஜய், அஜித் ரசிகர்கள்

‘போடா போடி’ படத்திற்கு பிறகு சிம்பு தனி ஹீரோவாக நடித்த எந்தப் படங்களும் வெளியாகவில்லை. இதற்கிடையில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘இங்க என்ன சொல்லுது’, காக்கா முட்டை ஆகிய படங்களில் கௌரவ வேடத்தில் தோன்றினார். கடந்த 3 ஆண்டுகளாக இதே நிலைதான் நீடித்தது.

இந்நிலையில் நாளை மறுதினம் ஆகஸ்ட் 14ஆம் தேதி சிம்பு நடித்துள்ள ‘வாலு’ படம் வெளியாகவுள்ளது. இப்படத்தை சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி எம்.ஜி.ஆர்., ரஜினி, அஜித் மற்றும் விஜய் ரசிகர்களும் பார்க்க ஆவலாக உள்ளனர். ஏன்? அவர்கள் காத்திருக்கின்றனர் என்பதை பார்ப்போம்.

‘வாலு’ பார்க்க வலுவான காரணங்கள் இதோ…

 • சிம்பு, ஹன்சிகா கால்ஷீட் பிரச்சினை, படம் டிராப், கோர்ட் தடை, பல வழக்குகள் என தடைகள் பல உடைத்து வெளியாகவுள்ளது.
 • கடந்த 2012ஆம் ஆண்டு இப்படத்திற்கு பூஜை போடப்பட்டு, அந்த வருடத்தின் தீபாவளிக்கு அன்றே வரும் என எதிர்பார்த்தனர். ஆனால் தற்போதுதான் வெளியாகவுள்ளது.
 • இப்படத்தில் ஜோடி சேர்ந்த சிம்பு, ஹன்சிகா நிஜத்திலும் ஜோடியானார்கள். ஆனால் இவர்களின் காதல் தோல்வியில் முடிந்தது.
 • தமன் இசையில் பாடல்கள் ஹிட்டடித்துள்ளன. மேலும் சிம்பு, அனிருத், ஸ்ருதி, டிஆர் ஆகியோரின் குரல்களில் பாடல்களும் உருவாகியுள்ளன.
 • இப்படத்தில் சிம்புவுடன் ஹன்சிகா, சந்தானம், விடிவி கணேஷ், பிரம்மானந்தம், ‘ஆடுகளம்’ நரேன், மந்த்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்தை விஜய் சந்தர் இயக்கியிருக்கிறார். ஷக்தி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரித்துள்ளார்.
 • சிம்பு அஜித்தின் தீவிர ரசிகர் என்பதால் அஜித் ரசிகர்கள் இப்படத்தை பார்க்க விருப்பப்படலாம். ஆனால் ரஜினி, விஜய் ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர். அதற்கு காரணம்…
 • இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியில் தல அஜித் ஸ்டைலில் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் தோன்றியுள்ளார் சிம்பு.
 • மேலும் தாறுமாறு’ என்ற பாடல் காட்சியில் எம்ஜிஆர், ரஜினி, அஜித் ஆகியோரின் கெட்டப்பிலும் வருகிறாராம் சிம்பு.
 • இதில் விஜய் எங்கே வருகிறார்? என்றுத்தானே கேட்கிறீர்கள்… ‘வாலு’ படம் வெளியாவதற்கு கேட்காமலேயே விஜய் நிறைய உதவிகள் செய்துள்ளார். மேலும் சிம்புவின் தந்தை டி.ஆர், தான் விஜய்யின் ரசிகர் என்று கூறியிருக்கிறார். எனவே விஜய் ரசிகர்களும் படம் பார்க்க காத்திருக்கின்றனர்.
 • மேலும் படத்தில் சந்தானத்தின் காமெடி, சிம்புவின் ஆக்ஷன், பெண்களுக்கு பிடிக்கும் செண்டிமென்ட் காட்சிகளும் படத்தில் நிறையவே உள்ளதாம்.
 • வாலு படத்திற்கு தமிழக அரசின் வரிச்சலுகையும் தணிக்கை குழுவினரின் ‘யு’ சான்றிதழும் கிடைத்துள்ளது.
 • தமிழகத்தில் மட்டும் 300க்கும் அதிகமான திரையரங்குகளிலும் உலகளவில் 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் வெளியாகிறது.