‘அனேகன்’ படத்தை பார்க்க ஐந்து காரணங்கள்-முன்னோட்டம்


‘அனேகன்’ படத்தை பார்க்க ஐந்து காரணங்கள்-முன்னோட்டம்
  • தனுஷ்-கே.வி ஆனந்த் கூட்டணியில் உருவாகியுள்ள படம் அனேகன். நாளை உலகமெங்கும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ள இப்படத்தில் தனுஷ் நான்கு விதமான கேரக்டரில் நடித்துள்ளார். இதுவரை இல்லாது இந்தப் படத்திற்காக தனது ஹேர் ஸ்டைலை மாற்றியமைத்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
  • சமீபத்தில் வெளியான வேலையில்லா பட்டதாரி, ஷமிதாப் ஆகிய இரண்டு வெற்றி படங்களை கொடுத்த தனுஷ் இந்தப்படத்தையும் வெற்றியாக கொடுத்து ஹாட்ரிக் அடிப்பாரா? என்று ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.
  • ஹீரோ பத்தி சொல்லியாச்சி. அப்போ ஹீரோயின் பத்தி சொல்ல வேண்டாமா என்று நீங்கள் சொல்லும் மைன்ட் வாய்ஸ் கேட்கிறது. அதற்கு முன்பு முக்கியமான கதாபாத்திரத்தை பற்றி சொல்லியாக வேண்டும். காதல் நாயகனாக கலக்கிய கார்த்திக் இப்போது முதன்முறையாக வில்லன் வேடம் ஏற்று நடித்துள்ளார்..
  • இவர்களுடன் அம்ரியா, ஆசிஷ் வித்யார்த்தி, அதுல் குல்கர்னி, தலைவாசம் விஜய் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ் என்பது நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. காரணம் டங்காமாரி பாடல் ஒன்றே போதும். பட்டயக் கிளப்பி கொண்டு இருக்கிறது. புகழ்பெற்ற ‘மரணகானா விஜி’ பாடிய இந்தப்பாடல் எவ்வாறு படமாக்கப்பட்டுள்ளது என்பதை காண சினிமா ரசிகர்களைப் போல் நாங்களும் காத்திருக்கிறோம்.
  • இம்முறை தனுஷ் உடன் இணைந்திருப்பவர் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி. ஆனந்த். இவர் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த அயன், கோ போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. கே.வி. ஆனந்த் இயக்கத்தில் வரும் ஐந்தாவது படம் அனேகன்.