‘தரணி’ – முன்னோட்டம்


‘தரணி’ – முன்னோட்டம்

மூன்று மனிதர்கள்

மூன்று காலச்சூழல்கள்

மூன்று முக்கிய முடிவுகள்

அதனால் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் ஏற்படும் மாற்றம், அந்த பயணம் எங்கு சென்றடைகிறது என்பதை புதிய பரிமாணத்தில் திரைக்கதையை அமைத்து தரணியின் கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் குகன்சன்பந்தம்.

நெடுஞ்சாலை ஆரி இதில் கதையின் நாயகனாக நடிக்கிறார். மூன்று விதமான தோற்றங்களில் வருகிறார் இவர். பல மாதங்கள் பயிற்சி எடுத்து தன்னை தயாராக்கிக் கொண்ட ஆரி தனது உடல் மொழி, வசன உச்சரிப்பு என அனைத்திலும் இதில் பல வேறுபாடுகளை காட்டி உள்ளார். இவருடன் குமரவேல், அறிமுக நடிகர் அஜய் கிருஷ்ணா, வருணிகா, சாண்ட்ரா மற்றும் பலர் நடிக்கின்றனர். முக்கியமான கதாப்பாத்திரத்தில் தெருக்கூத்து கலைஞர் புரிசை கண்ணப்ப சம்பந்தம் நடிக்கிறார்.

இசை           பா.என்சோன்

ஒளிப்பதிவு     R.பிரகாஷ் மற்றும் வினோத்காந்தி

பாடல்கள்       முத்துலிங்கம், பழநி பாரதி. புலவர்.செ.மு.திருவேங்கடம்

படத்தொகுப்பு   V.டான் போஸ்கோ

கலை          R .மோகன்

தயாரிப்பு நிறுவனம் மெலோடி மூவிஸ்

தயாரிப்பாளர்         V.G.S நரேந்திரன்

படத்தின் பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் லைவ் இசை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.