பெண்கள் மட்டுமே நடிக்கும் ‘இனி வரும் நாட்கள்’ – முன்னோட்டம்


பெண்கள் மட்டுமே நடிக்கும் ‘இனி வரும் நாட்கள்’ – முன்னோட்டம்

அனைத்து துறைகளிலும் ஆண்களைப் போல பெண்கள் நுழைந்து விட்டார்கள். முன்பு ஒரு சில துறைகளை விட்டுவைத்தார்கள். ஆனால் இனி வரும் நாட்களில் பெண்கள் எல்லாம் துறையிலும் நுழைந்து விடுவார்கள் எனலாம். அதனால்தான் பெண்கள் மட்டுமே நடிக்கும் ஒரு படத்திற்கு இனிவரும் நாட்கள் என பெயரிட்டுள்ளார்கள் போல. ஆனால் ஒரே ஆறுதல் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆண்கள் இருக்கிறார்கள்.

மலையாளத்தில்  முப்பதுக்கும்  மேற்பட்ட  படங்களை  இயக்கிய  பிரபல இயக்குனர்  துளசிதாஸ்  தமிழில்  இயக்கும்  படம்  “இனி வரும் நாட்கள் ”

MJD புரொடக்ஷன்  தயாரிப்பில்  உருவாகும்  இப்படத்தில் முழுக்க , முழுக்க  பெண்கள்  மட்டுமே  நடித்திருக்கிறார்கள் . ஒரு இடத்தில்  கூட  ஆண்கள்  நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்குமெண்டரி  எடுக்க போகும்  கல்லூரி  மாணவிகளின் பயணத்தில் நடக்கும் எதிர்பாராத சம்பவமும், அதை  தொடர்ந்து நடக்கும் அதிர்ச்சிகளும் தான் படத்தின் கதை. இது சஸ்பென்ஸ் கலந்த  திரில்லர்  படமாக உருவாகவுள்ளது. பாட்டு , சண்டை, காமெடி  என்று   பொழுதுபோக்கு அம்சங்கள்  நிறைந்த இப்படத்தின் படப்பிடிப்பு  கம்பம் , நாகர்கோவில் , தேக்கடி  உள்ளிட்ட  பகுதிகளில் நடைபெற்று  வருகிறது ..

இனியா, ஆர்த்தி , சுபிக்ஷா , ஈடன், அர்ச்சனா ஆகியோர்  கதாநாயகிகளாக நடிக்கிறார்கள் . முக்கிய  கதாபாத்திரத்தில்  நதியா  நடிக்கிறார் .

படத்தில்  கதாநாயகிகள்  இருக்கிறார்கள்.  கதாநாயகன்  எங்கே ? என்று கேட்டதற்கு  படத்தின்  திரைக்கதையே  நாயகன் என்று  சொல்கிறார் இயக்குனர் துளசிதாஸ்.

இயக்கம்      – துளசி தாஸ்

ஒளிப்பதிவு – சஞ்சீவ்  சங்கர்

கதை – மனோ  ரஞ்சித்

வசனம் -துரைபாண்டி

இசை – எம் ஜி  ஸ்ரீ குமார்

நடனம்  -கூல் ஜெயந்த்

சண்டை  பயிற்சி – மாபியா  சசி

கலை – ஜஸ்டீன்

தயாரிப்பு நிர்வாகம் – அமிர்தா  மோகன் .

பி ஆர் ஓ – குணா .

தயாரிப்பு – எம் . ஜே  .டி   புரொடக்ஷன் .

Related