இசை – முன்னோட்டம்


இசை – முன்னோட்டம்

எஸ்.ஜே. சூர்யா இசையமைத்து இயக்கி நடித்திருக்கும் படம் இசை. வருகிற ஜனவரி 30ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.

இயக்குநர், கதாசிரியர், நடிகர் என பல்வேறு துறைகளில் கலக்கி வந்த எஸ்.ஜே. சூர்யா, இசை படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

ஜோதிகா, நிலா இவர்களை தொடர்ந்து இவரது புதிய கண்டுபிடிப்பான சாவித்ரி கதாநாயகியாக அறிமுகமாகிறார். (இவரது ஸ்டில்கள் இணையத்தை கலக்கி வருவது வேறு கதை) சிவாஜி படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த சத்யராஜ் நீ….ண்….ட இடைவேளைக்கு பின்னர், இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார். ஜெயப்பிரகாஷ், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், கஞ்சா கருப்பு மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தை சுப்பையா மற்றும் விக்டர் ராஜ் பாண்டியன் இருவரும் தயாரித்துள்ளனர்.

இசை படம் இளையராஜா-ரஹ்மான் இருவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

(விடுங்க பாஸ். இன்னும் ரெண்டு நாள்ல தெரிந்து விடப்போகிறது)

Latest Post