‘இத்திரையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே’


‘இத்திரையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே’

‘இத்திரையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே’

படம் டைட்டில் கார்டு போடும்போது இந்த வாக்கியங்களை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். ஆனால் விரைவில் வெளியாகவிருக்கும் ஒரு படத்தினை நீங்கள் பார்க்கும் போது இந்த வாக்கியங்கள் இருமுறை திரையிடப்படும். ஏனென்றால்…

இந்த வாக்கியங்கள்தான் ஒரு படத்தின் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ரொம்ப குழம்பிடக் கூடாது இல்லையா? அதான் இப்பவே சொல்றோம். இன்னும் கொஞ்ச நாள்ல ‘இப்படத்தில் விலங்குகள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை’ என்ற தலைப்பில் கூட படம் வரலாம். பார்த்துக்குங்க… சரி… விஷயத்துக்கு வர்றோம்…

கோல்டன் ஹார்ஸ் கிரியேஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்குதான் இப்படி ஒரு வித்தியாசமாக தலைப்பிட்டுள்ளனர்.

“இத்திரையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே” என்ற இப்படத்தில் சரண் சக்கரவர்த்தி-அகன்ஷா மோகன் இருவரும் ஜோடியாக நடிக்க இவர்களுடன் நிழல்கள் ரவி, Y.G.மகேந்திரன், சண்முகசுந்தரம், ஜார்ஜ்மரியம், ஜிகிர்தண்டா ராம்ஸ், அருள் ஜோதி, ராஜேந்திரன், சிங்கம்புலி, ஜெயமணி, சபரிநாதன், காளையன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

N.K. பதி, கெளதம் சேதுராம் ஆகியோர் ஒளிப்பதிவு செய்ய, மரியா ஜெரால்டு இசையமைக்கிறார். இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்கிறார்கள் விஜய்பிரகாஷ் & சாக்ரடீஸ். பல குறும்படங்களை இயக்கிய விஜய்பரமசிவம் இயக்கியிருக்கிறார்.

படம் குறித்து இயக்குனர் கூறியதாவது… “இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சுட்டகதை போன்ற படங்களை போன்று இதுவும் ஒரு பிளாக் காமெடி படம். மிகப்பெரிய ஜமீன்தார் சண்முகசுந்தரம் ஒரு ரகசியத்தை சொல்லிவிட்டு இறந்து போகிறார். அதை கேட்ட சிலர் அந்த ரகசியத்தை வைத்து கோடிக்கணக்கான சொத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார்கள்.

அது அத்தனையும் நகைச்சுவையாக சொல்லப்பட்டிருக்கிறது. இப்படத்தில் கையாளப்பட்டுள்ள பிளாக் காமெடி யுக்தி வரும் காலங்களில் நிறைய படங்களில் பயன்படுத்தபடலாம்” என்கிறார் இயக்குனர் விஜய் பரமசிவம்.

Related