K3 – பட முன்னோட்டம்


K3 – பட முன்னோட்டம்

விமல்ராஜா-ஆதிரா ஜோடியாக நடிக்க, காமதேனு இண்டர்நேஷனல் படநிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக K3 என்று பெயரிட்டுள்ளனர். மேலும் இவர்களுடன் விஸ்வாந்த், சுதிர், பாவாலட்சுமணன், மீசை ராஜேந்திரநாத் ஆகியோரும் நடித்கிறார்கள்.

இசை   –    பிரத்வய் சிவசங்கர் (இவர் ஏ.ஆர்.ரகுமான் மாணவர்)

பாடல்கள்    –  இயக்குனர் ரவிசங்கர்

எடிட்டிங்    –   கே.தணிகாசலம்

நடனம்    –   அஜய்சிவசங்கர்

கலை  –  கதிர்பத்மநாபன்

தயாரிப்பு  வடிவமைப்பு   –  எஸ்.அருணாச்சலம்

தயாரிப்பு    –   காமதேனு இண்டர்நேசனல்.

இணை தயாரிப்பு   –  என்.திருமுருகன், வி.பிரகாஷ்ராஜ்

கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம்  –  எம்.எஸ்.அண்ணாதுரை

படம் பற்றி இயக்குனர் எம்.எஸ்.அண்ணாதுரை கூறியதாவது…

“இரவு நேரங்களில் போஸ்டர் ஒட்டும் கதிர், கஞ்சா, கருப்பு என்ற மூன்று இளைஞர்களின் வாழ்க்கை தான் இந்த படம் அதனால் தான் இந்த படத்திற்கு ‘K3’ என்று பெயர் வைத்துள்ளோம். இந்த மூன்று பேரும் எப்படி கூலிப்படையாக மாறுகிறார்கள் என்பதுதான் கதை. இன்று நாட்டில் கூலிப்படை வேலை செய்வது  பெரும்பாலும் இளைஞர்கள்தான். அவர்கள் கூலிப்படையாக மாற காரணம் அவர்களது சூழ்நிலைதான். அதைதான் இதில் சொல்கிறோம்.

காதல் மற்றும் திரில்லர் படமாக உருவாகி உள்ளது இந்த படம். படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, கேரளா, சென்னை, சேலம் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. இந்த படத்தை பார்த்த கன்னட தயாரிப்பாளர் ஒருவர் இந்த படத்தின் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்யும் உரிமையை வாங்கிவிட்டார். அது எங்கள் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக நாங்கள் கருதுகிறோம்” என்றார்.

வருகிற பிப்ரவரி 20ஆம் தேதி ‘K3’ படம் வெளியாக உள்ளது.

Related