‘லொடுக்கு பாண்டி’ – முன்னோட்டம்


‘லொடுக்கு பாண்டி’ – முன்னோட்டம்

கருணாஸ் அறிமுகமான நந்தா படத்தில் அவரது கேரக்டரான லொடுக்கு பாண்டி என்ற பெயரையே ஒரு படத்திற்கு சூட்டி இருக்கிறார்கள்.

கருணாஸ் கதாநாயகனாக நடிக்க, விக்டரி கிரியேசன்ஸ் மற்றும் ஜி பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் “லொடுக்கு பாண்டி” படத்தை இயக்குகிறார் ரஜனீஷ்.

கருணாஸ் ஜோடியாக நேகா சக்சேனா நடிக்க, இளவரசு, மனோபாலா, சென்ட்ராயன், ரிஷா, ரேகா மற்றும் பலர் நடிக்கவிருக்கிறார்கள்.

அடுத்தவர்களை ஏமாற்றுவது.. இன்னொருவரது வாழ்கையை தட்டி பறிப்பது திருட்டு வாழ்க்கை என்று வாழ்வதை விட்டு நேர்மையாக வாழ்ந்தால் வெற்றியின் உச்சத்தை தொடலாம்.  நேர்மையில்லாமல் கிடைக்கும் வெற்றி தற்காலிகமானதே! நிரந்தரமல்ல என்பதே இப்படத்தின் கதையாம்.

மற்ற விவரங்கள்

ஒளிப்பதிவு   –   ஜெய்ஆனந்த்

இசை  –  எம்.எஸ்.தியாகராஜன்

கலை  –         ரவி /   எடிட்டிங்   –  நாகேந்திர அரஸ்

நடனம்  –         சிவசங்கர், கம்பி ராஜு

பாடல்கள்   –     ஏக்நாத், மீனாட்சி, அருண்பாரதி

வசனம்  –        சுரேஷ் கிரிஷ் /   தயாரிப்பு நிர்வாகம் – சதீஷ் – கேசவராஜ்

தயாரிப்பு   –      பரத்தேஷ் –  B.சீனு

விரைவில் திரைக்கு வருகிறான் இந்த ”லொடுக்கு பாண்டி”