மாதவன், ரித்திகா சிங் நடித்த ‘இறுதிச்சுற்று’ – ஒரு முன்னோட்டம்..!


மாதவன், ரித்திகா சிங் நடித்த ‘இறுதிச்சுற்று’ – ஒரு முன்னோட்டம்..!

கடந்த மூன்று வருட கால கடுமையான உழைப்பிற்கு பிறகு மாதவனின் இறுதிச்சுற்று நாளை மறுநாள் வெளியாகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு மாதவனின் இப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதற்கான காரணங்களை பார்த்து விடுவோமா?

  • மாதவன் தமிழில் நாயகனாக அறிமுகமான படம் அலைபாயுதே. அதில் மணிரத்னம், பிசி ஸ்ரீராம் மற்றும் ஏஆர் ரஹ்மான் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். தற்போது 16 வருடங்களுக்கு பிறகும் அதே நாயகன், ஆனால் அந்த மூன்று கலைஞர்களின் உதவியாளர்களோடு பணியாற்றியுள்ளார்.
  • இறுதிச்சுற்று படத்தின் இயக்குனர் சுதா, மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர். இதன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஏ.ஆர். ரஹ்மானிடம் உதவியாளராக பணியாற்றியவர். இதன் ஒளிப்பதிவாளர் சிவக்குமார், பிசி ஸ்ரீராமிடன் உதவியாளராக பணியாற்றியவர்.
  • இறுதிச்சுற்று படத்தின் டீசர், ட்ரைலர், பாடல்கள் வெளியாகி பட்டைய கிளப்பி கொண்டிருக்கிறது.
  • இதில் நாயகி ரித்திகா சிங் கேரக்டர் பெரிதாக பேசப்படும். ஒரு நிஜ பாக்ஸிங் வீராங்கனையே நாயகியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இதுவரை சாக்லேட் பாயாக பெரும்பாலான படங்களில் வந்த மாதவன் இதில் தன்னுடைய ஒரிஜினல் தோற்றத்திலேயே நடித்துள்ளார்.
  • படம் ஓடக்கூடிய மொத்த நேரமே 112 நிமிடங்களே. அதாவது இரண்டு மணி நேரம் கூட இல்லை. எனவே ஒரு நாளைக்கு நிறைய காட்சிகளும் திரையிடப்படலாம் எனத் தெரிகிறது.
  • இப்படத்திற்காக அமெரிக்கா சென்று பாக்ஸிங் பயிற்சி பெற்றுள்ளார் மாதவன். கிட்டதட்ட 1 வருடத்திற்கு மேலாக தன் உடலை வருத்தி நடித்துள்ளார்.
  • பொதுவாக தமிழில் வெளியான பாக்ஸிங் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. விஜய்யின் பத்ரி, மற்றும் ஜெயம் ரவியின் எம். குமரன், பூலோகம் படங்களே இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.
  • சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. போடா… போடா, ஏய் சண்டக்கார ஆகிய பாடல்கள் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளன.