“மேல்நாட்டு மருமகன்” – ஒரு முன்னோட்டம்


“மேல்நாட்டு மருமகன்” – ஒரு முன்னோட்டம்

ஸ்கை மூவீஸ் என்ற படநிறுவனம் ஒரு புதிய படத்தை தயாரிக்கிறது. மேல்நாட்டு மருமகன் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள இப்படத்தை தமிழ்நாடு. எஸ்.பகதூர்ஷா தயாரிக்கிறார்.

இந்த படத்தில் ராஜ்கமல் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆண்ட்ரீயன் அறிமுகமாகிறார்.  கெளதம்கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, இசையமைக்கிறார் வி.கிஷோர் குமார்.

படத்தின் பாடல்களை நா.முத்துக்குமார், நாஞ்சில் நாதன் உள்ளிட்டவர்கள் எழுத, எடிட்டிங் செய்கிறார் ராஜ்கீர்த்தி.

ஆனந்தி-ன் தயாரிப்பு மேற்பார்வையில், கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார்  எம்.எஸ்.எஸ்.

ஒவ்வொருவரும் பணம் சம்பாதிக்க பல நாடுகள் பறந்தாலும். பண்பாட்டுக்கும், கலாச்சாரத்துக்கும்  நம்ம நாட்டை மிஞ்ச எந்த நாடும் இல்லை என்பதே இந்த படத்தின் கதையாம். கலாச்சாரம் கலந்த படம் என்பதால் இந்த படத்தின் படப்பிடிப்புகளை தமிழ் நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் படமாக்கி இருக்கிறார்களாம்.

விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற பிப்ரவரி மாதம் நடத்த இருக்கிறார்கள்.

Related