நகர்வலம் – முன்னோட்டம்


நகர்வலம் – முன்னோட்டம்

‘ரெட்கார்பெட் நிறுவனத்தின் சார்பாக எம்.நடராஜன், என்.ரமேஷ் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கும் படம்  ‘நகர்வலம்’. இப்படத்தில், கதை நாயகனாக ‘காதல் சொல்ல வந்தேன்’ பாலாஜி, புதுமுகநாயகி  தீக் ஷிதா, பாலா, யோகி பாபு , ‘நமோ’ நாராயணன்  ‘வேட்டை ‘முத்துக்குமார், இயக்குனர் மாரிமுத்து, ரிந்து ரவி , ‘அட்டக்கத்தி’ வேலு , ‘மதுபானக்கடை’ ரவி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின்  இயக்குனர் மார்க்ஸ், இத்திரைப்படத்தை பற்றி கூறியதாவது… “சென்னை நகரில், குடிநீர் விநியோகிக்கும்  மெட்ரோ வாட்டர் லாரி டிரைவரான நாயகன் , பல எரியாக்களுக்கு  குடிநீர் விட செல்லுகையில் , அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் காதல் கொள்கிறார். அதன் பின்னர் ஏற்படும் பிரச்சனைகள்தான் கதை” என்றார் .

மேலும், நடிகர் பசுபதி ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இதில் சென்னை பூர்விக மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் கானா பாடலை நீண்ட நாட்களுக்கு பிறகு, ‘கானா புகழ்’ இசையமைப்பாளர் தேவா பாடியுள்ளார்.

தொழிற்நுட்ப கலைஞர்கள்​:
ஒளிப்பதிவு: தமிழ் தென்றல்
இசை : பவன்
படத்தொகுப்பு : மணிகண்ட பாலாஜி
கலை : தேவா
சண்டை பயிற்சி: ஃபயர்’ கார்த்திக்
நடனம்: கல்யாண் , நந்தா, விமல் ராஜ்
பாடல்கள்: மோகன் ராஜன்.

சென்னை நகரின் நெருக்கடி மிகுந்த பகுதிகளான அண்ணா நகர், சைதாப்பேட்டை, கே. கே. நகர், கண்ணகி நகர் போன்ற இடங்களில் இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகின்றது.