உத்தமவில்லனை ஏன் பார்க்கனும்? நம் கடமையல்லவா!


உத்தமவில்லனை ஏன் பார்க்கனும்? நம் கடமையல்லவா!

‘உத்தம வில்லன்’ தரிசனம் கிடைக்க நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன.  மணி துளிகள்… நிமிடங்களாகி… நிமிடங்கள் நொடிகளாகி திரையில் எப்போது பார்ப்போம் என்று கோடிக்கணக்கான கண்கள் காத்து கிடக்கின்றன. இன்னும் ஒரு சில நாட்களில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது உத்தமவில்லன்.

கமல் படத்திற்கு எப்போதும் ஒவ்வொரு வகையான எதிர்பார்ப்பு இருந்துக் கொண்டே இருக்கும். இம்மியளவு கூட குறையாமல் இம்முறையும் இருக்கிறது. சொல்லப்போனால் அது பன்மடங்கு உயர்ந்து நிற்கிறது. ஏன்? இப்படத்தை பார்க்க எது உயர்ந்த காரணமாக இருக்கமுடியும். கமலைத் தவிர அப்படி என்ன இருந்துவிட முடியும் என்று நீங்கள் நினைப்பது சரிதான். அவற்றோடு நிறைய காரணங்கள் கண்களுக்கு விருந்தளிக்க இருக்கின்றன.

உத்தமவில்லனை ஏன் பார்க்கனும்? அது நம் கடமையல்லவா? இதான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவிவரும் ட்ரெண்ட். அதற்கான காரணங்கள் இதோ…

  1.  புகழ்பெற்ற ஒப்பனைக் கலைஞர்கள், டெக்னீஷியன்கள், லொக்கேஷன்கள் என ஹாலிவுட்  தரத்திற்கு இணையாக ஒரு தமிழ் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
  2.  டிரெய்லர் பார்க்கும்போதே கமலின் வசனங்கள் நம்மை ஆட்கொள்கின்றன. இப்படத்தின் 3வது டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. காதல், பாசம், நன்றி, மன்னிப்பு இதை சொல்வதற்கு இப்போதெல்லாம் நேரம் இல்லை என்று இன்றைய எந்திர வாழ்க்கையை ஒரு வரியில் சொல்லியிறுக்கிறார் கமல்.
  3.  உத்தமன், மனோரஞ்சன் என இரண்டு வேடங்களில் மிரட்டியிருக்கிறார் கமல். வில்லுப்பாட்டில் தொடங்கி வித்தியாசமான பல கெட்அப்களில் தோன்றி நம்மை வியக்கவைத்திருக்கிறார்.
  4.  கமலின் கவிதை வரிகளில் உருவாகியுள்ள 5 பாடல்களுக்கு இசை உருவம் தந்திருக்கிறார் ஜிப்ரான். இவர்கள் கூட்டணியில் விஸ்வரூபம்-2 இரண்டாவது படமாக வெளிவரவிருந்தாலும் ‘உத்தமவில்லன்’ பாடல்களே இன்று விஸ்வரூபம் எடுத்து இப்படத்தின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.
  5.  கேரளாவின் புகழ்பெற்ற கலையானது தெய்யம். இதன் கலைஞராக கமல் வரும் காட்சிகள் இந்திய சினிமாவிற்கே புதியது என்றும் கமலின் நடனம் இளம் தலைமுறை நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளதாகவும் படம் பார்த்த பிரபலங்கள் கூறியுள்ளனர்.
  6.  இவையில்லாமல் கமல்-ரஜினி உள்ளிட்ட மாபெரும் கலைஞர்களை கண்டெடுத்து அவர்களை செதுக்கி தமிழ் திரையுலகுக்கு கொடுத்த குருநாதர் கே.பாலசந்தரின் கடைசி படம் இது.

என்ன பாஸ் படிச்சவுடனே புக் பண்ண ரெடியாகிட்டீங்க போல…