தனுஷின் ‘மாரி’ பார்க்க வெறித்தனமான காரணங்கள்…


தனுஷின் ‘மாரி’ பார்க்க வெறித்தனமான காரணங்கள்…

‘வேலையில்லா பட்டதாரி’, ‘அனேகன்’ படங்களைத் தொடர்ந்து தனுஷின் ‘மாரி’ படம் பலத்த எதிர்பார்ப்புடன் வெளியாகவுள்ளது. இப்படத்தைப் பார்க்க வெறித்தனமான காரணங்கள் இதோ..

 • தனுஷின் 32வது படமாக ‘மாரி’ வெளிவரவுள்ளது. அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள படங்களும் இதில் அடங்கும்.
 • ஆர்.சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க போலீஸாக விஜய் ஜேசுதாஸ் நடித்துள்ளார். இவர்களுடன் ரோபா சங்கர், வினோத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பாலாஜி மோகன் இயக்க ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 • தனுஷ் வடசென்னையில் வசிக்கும் மாரி என்ற இளைஞன் கேரக்டரில் வருகிறார். காஜல் அகர்வால் பேஷன் டிசைனராக நடித்துள்ளார். சென்னைக்கு வரும் நாயகி சில பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வதாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் புறா ஒரு முக்கிய கேரக்டரில் வருகிறது.
 • படத்தின் பாடல்கள் கதையை சார்ந்தே இருக்கிறதாம். ஒரு பாடலை தூத்துக்குடியில் படமாக்கியுள்ளனர். தனுஷ்-அனிருத் தோன்றும் பாடல் படத்தின் ஹைலைட்டாக இருக்குமாம்.
 • “மட்டன் வெட்டுவியே உனக்கு இப்ப மல்லிகை ருசிக்கிறதா… மீச முறுக்குவியே கூந்தல் வாசம் மணக்கிறதா” இந்த வரிகள் காதலர்களுக்காகவும்… “மாரி… கொஞ்சம் நல்ல மாறி…ரொம்ப வேற மாறி மாரி… தேச்சா தங்கம் மாறி…மொறச்சா சிங்கம் மாறி”… இந்த வரிகள் இளைஞர்களுக்காகவும் எழுதப்பட்டுள்ளதாம்.
 • காதலில் சொதப்புவது எப்படி மற்றும் வாயை மூடி பேசவும் படங்களின் இயக்குனர் பாலாஜி மோகன் இப்படத்தை இயக்கியுள்ளார். தனுஷை மட்டுமே மனதில் வைத்து இக்கதையை உருவாக்கினாராம் இயக்குனர். படப்பிடிப்புக்கு இரண்டு மாதங்கள் கூட முழுமையடையவில்லை. மொத்தத்தில் ஐம்பத்தி ஏழு நாட்களில் படப்பிடிப்பை முடித்துள்ளனர்.
 • மாரி படத்தின் டீஸர் எத்தகைய வரவேற்பு இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். தனுஷ் ஸ்டைலாக புகைப்பிடிப்பது மொத்த டீஸருமாக இருந்தது. எனவே அதே சமயத்தில் எதிர்ப்பையும் சம்பாதித்தது. இப்படத்தின் ட்ரைலரை யுடியூபில் 30 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
 • புறா ரேஸை வைத்துதான் படத்தின் கதை ஆரம்பிக்கப்படுகிறதாம். தனுஷ் இதில் புறாவை ரேஸ் விடுபவராகவும் லோக்கல் தாதாவாகவும் வருகிறார். இதனிடையே காஜலுடன் காதல், ரவுடிகளுடன் மோதல் என கலக்கியிருக்கிறார் தனுஷ்.
 • பெரும்பாலும் வேலையில்லாத இளைஞனாக தோன்றும் தனுஷ் இதில் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார். காதல், காமெடி, கலாட்டா என இறங்கி அடிக்கிற தரலோக்கலாக நடித்திருக்கிறாராம் தனுஷ் ரோபா சங்கர் வரும் காட்சிகள் காமெடி களை கட்டுமாம்..
 • தனுஷ் நாயகிகளை எப்போதும் சிபாரிசு செய்வதில்லை. இப்படத்திலும் அதுவே நடந்துள்ளதாம். தனுஷுடன் விக்னேஷ் சிவன், ரோகேஷ் ஆகியோரும் பாடல்கள் எழுதியுள்ளனர்.
 • கொச்சியில் உள்ள Digital Bricks என்ற நிறுவனம் கிராபிக்ஸ் பணிகளை செய்துள்ளது. படத்திற்கு முதலில் U/A சான்றிதழ் கிடைத்தது. பின்னர் மறுதணிக்கை செய்யப்பட்டு சில காட்சிகளின் வசனத்தை MUTE செய்துவிட்டு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.