சொன்னதை செய்தார் சந்தானம்; இனிமே இப்படித்தானாம்.!


சொன்னதை செய்தார் சந்தானம்; இனிமே இப்படித்தானாம்.!

‘லொள்ளு சபா’ புகழ் இரட்டையர்கள் முருகன், பிரேம் ஆனந்த் ஆகிய இருவரும் இணைந்து இயக்கியுள்ள படம் ‘இனிமே இப்படித்தான்’. இப்படத்தை சந்தானம் தனது ஹேன்ட் மேட் ஃபிலிம்ஸ் சார்பாக தயாரித்து நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் ஆஸ்னா ஷவேரி, அகிலா கிஷோர் ஆகிய இருவரும் சந்தானத்தின் ஜோடியாக நடித்துள்ளனர்.

இவர்களுடன் தம்பி ராமையா, FEFSI விஜயன், பிரகதி, நரேன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்நிலையில் இனிமே இப்படித்தான் படம் பற்றி இரட்டை இயக்குனர்கள் கூறியதாவது…

“நாங்கள் சந்தானத்திற்கு 3 கதைகளை ரெடி செய்திருந்தோம். ‘இனிமே இப்படித்தான் கதையை தேர்வு செய்ததோடு இல்லாமல் அப்படத்தை எங்களையே இயக்கவும் சொன்னார். ஆறு வருடங்களுக்கு முன் அவரது படத்தில் எங்களை இயக்குனர்களாக அறிமுகப்படுத்துவேன் என்று சொன்னார். அன்று சொன்னதை இன்று செய்தார். சந்தானத்திற்கு கச்சிதமான காதல் கலந்த காமெடி படம் இது. அழகான பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் திரியும் வேலையில்லா இளைஞனாக வருகிறார் சந்தானம்.

விடிவி கணேஷ் சந்தானத்திற்கு காதல் ஆலோசகராக நடித்துள்ளார். இருவரும் இணைந்து தோன்றும் காட்சிகள் ரசிகர்களுக்கு காமெடி விருந்தாக அமையும். ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்துள்ளார் சந்தானம். அனைத்து தரப்பு ரசிகர்களை இப்படம் திருப்திப்படுத்தும். இனிமே எல்லாம் இப்படித்தான்” என்றனர் இவர்கள்.