‘வை ராஜா வை’ படத்தோட ஸ்பெஷல் தெரிஞ்சிக்கனுமா?


‘வை ராஜா வை’ படத்தோட ஸ்பெஷல் தெரிஞ்சிக்கனுமா?

பெரிய நட்சத்திங்களின் படம் வெளியாகிறது என்றாலே மற்ற நடிகர்களும் சரி தயாரிப்பாளர்களும் சரி, எதற்கு மோதல்? பேசாமல் போட்டியில் இருந்து விலகி கொள்வோம் என்று ஒதுங்கி கொள்வார்கள். ஆனால் இயக்குனர் ஐஸ்வர்யா தன் ‘வை ராஜா வை’ படத்தை கமலின் ‘உத்தமவில்லன்’ படத்துடன் போட்டியிட வைக்கிறார். அப்படி என்ன ஸ்பெஷல் அப்படத்தில் இருக்கிறது என்று கேட்பவர்களுக்கு…

  • திரையுலக பிரபலங்களின் வாரிசுகள் இணைந்து இப்படத்தில் பணியாற்றியுள்ளனர். ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்க, கார்த்திக் மகன் கௌதம் நாயகனாக நடிக்க, பிரபல கர்நாடக இசைக் கலைஞர் செம்மக்குடி ஸ்ரீனிவாச ஐயரின் பேத்தி ப்ரியா ஆனந்த் நாயகியாக நடிக்க, வைரமுத்து மகன் மதன் கார்க்கி வசனம் எழுத, இளையராஜா மகன் யுவன் இசையமைக்க, நடன இயக்குனர் ரகுராம் மகள் காயத்ரி ரகுராம் உள்ளிட்ட வாரிசுகள் இணைந்துள்ளனர்.
  • கௌரவ தோற்றத்தில் கொக்கி குமாராக தனுஷ் நடித்துள்ளார். மேலும், எஸ்.ஜே. சூர்யா இப்படத்தில் ஐட்டம் பாட்டு ஒன்றுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.
  • இவர்களுடன் விவேக், இயக்குனர் வசந்த், டாப்ஸி,  டேனியல் பாலாஜி, சதீஷ், மனோபாலா, மயில்சாமி, சுவாமிநாதன், எம்.எஸ்.பாஸ்கர், ஸ்ரீரஞ்சனி உள்ளிட்டோருடன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
  • யுவனின் இசையில் பாடல்கள் முன்பே ஹிட்டடித்துள்ளன. கானா பாலாவின் பாடல், ஹிப் ஹாப் தமிழன் ஆதியின் பாடல், தனுஷின் வரிகளில் இளையராஜா பாடிய பாடல் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.
  • ஐஸ்வர்யாவின் முதல் படம்’3′. இப்படத்தின் மேக்கிங்காக ஐஸ்வர்யாவை ஊடகங்கள் பெரிதும் பாராட்டியது. எனவே இவரின் 2வது படைப்புக்காக காத்திருக்கின்றனர் சினிமா ரசிகர்கள்.
  • கௌதம் கார்த்திக் – ப்ரியா ஆனந்தின் ஜோடி கெமிஸ்டரி பக்காவாக ஒர்க் அவுட்டாகியுள்ளது.
  • கேம்ளிங்கை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தினை மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாக்கியுள்ளனர் ஏஜிஎஸ் எண்டர்டெயின்ட்மெண்ட் நிறுவனத்தினர்.