‘தெறி’ முன்னோட்டம்… படத்தை அவசியம் பார்க்க வேண்டிய காரணங்கள்…!


‘தெறி’ முன்னோட்டம்… படத்தை அவசியம் பார்க்க வேண்டிய காரணங்கள்…!

விஜய் படங்கள் என்றாலே நிச்சயம் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதிலும் நாளை வெளியாகவுள்ள தெறி படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல், ஒட்டு மொத்த குழந்தைகளும் காத்திருக்கின்றனர். மேலும் காரைக்குடியில் உள்ள தியேட்டரில் பெண்களுக்கான ஸ்பெஷல் காட்சியே திரையிடப்படுகிறது.

அப்படி என்ன இருக்கிறது…? எப்படி உருவானது இந்த எதிர்பார்ப்பு என்பதை இந்த முன்னோட்டத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்…

 • விஜய்க்கு பேமிலி ஆடியன்ஸ் எப்பவும் உண்டு. இதில் குழந்தைகளுக்கான காட்சிகள் நிறைய உள்ளன.
 • மீனா மகள் நைனிகாவின் குறும்புத்தனத்தை பார்க்க ஒரு பெரிய பட்டாளமே காத்திருக்கிறது. ட்ரைலரில் இவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் ரசிகர்கள் விரும்பி கேட்டனர்.

 

nainika-vijay-theri-still

 

 • ரசிகர்கள் மட்டுமில்லாமல் டீசர் மற்றும் ட்ரைலர் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து ஒரு கோடி ஹிட்ஸை கடந்துள்ளது.
 • ராஜா ராணி என்ற படத்தில் அழகான ரொமான்ஸ் உடன் அழகான குடும்ப சென்டிமெண்டையும் கொடுத்திருந்தார் அட்லி. எனவே இதிலும் அந்த டச் இருக்கும் என நம்பிக்கை உள்ளது.

 

vijay with Mottai

 

 • மேலும் தந்தை-மகள் பாசக் காட்சிகள் அதிகம் உள்ளதாம். நைனிகாவுடன் விஜய்யின் சொந்த மகள் திவ்யாவும் நடித்துள்ளார்.
 • ரொமான்ஸ் விஜய், பேமிலி விஜய் போல மாஸ் விஜய்யும் இதில் இருக்கிறார். எனவே ஆக்சன் காட்சிகளுக்கு எந்த பஞ்சமும் இருக்காது. சண்டைக் காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார்.

 

vijay with samantha

 

 • இது ஜி.வி.பிரகாஷின் இசையமைப்பில் உருவாகியுள்ள 50வது படம். படத்தின் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதால் இசை பிரியர்களுக்கும் படம் பிடிக்கும்.
 • மேலும் தேனிசை தென்றல் தேவா, டி. ராஜேந்தர், தேசிய விருது பெற்ற உத்ரா உன்னி கிருஷ்ணன் ஆகியோரும் தங்கள் குரலால் ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளனர்.
 • பாடல்களை புலமை பித்தன், கபிலன், நா, முத்துக்குமார், ரோகேஷ், அருண் ராஜா காமராஜ் உள்ளிட்டோர் எழுதியிருப்பது படத்திற்கு கூடுதல் சிறப்பு.

 

theri song

 

 • ஆடியோ விழாவில் விஜய் சொன்னது போல… செல்ஃபி புள்ள சமந்தா, குல்ஃபி புள்ள எமி ஜாக்சன் இருவரும் நடித்துள்ளனர். எனவே இளைஞர்களுக்கான விருந்துக்கும் குறைவிருக்காது.
 • ராதிகா சரத்குமார், பிரபு, மொட்டை ராஜேந்திரன் என பிரபல நட்சத்திரங்களும் இந்த தெறி கூட்டணியில் இணைந்துள்ளனர்.

 

Amy with VIjay

 

 • ரஜினிக்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் மகேந்திரன் முதன் முதலாக நடித்திருக்கிறார்.

தெறிக்க விட இவ்வளவு காரணங்கள் போதும்தானே…