10 எண்றதுக்குள்ள விமர்சனம்

‘ஐ’ படத்தை தொடர்ந்து விக்ரம் நடித்து வெளியாகியுள்ள படம். இதில் முதன்முறையாக சமந்தாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இப்படத்தில் ‘10 எண்றதுக்குள்ள’ எல்லாத்தையும் முடித்துவிடுகிறாராம் விக்ரம். அதையும் பார்த்து விடுவோம்… வாருங்கள்…

நடிகர்கள் : விக்ரம், சமந்தா, பசுபதி, ராகுல் தேவ், மனோ பாலா, ராம்தாஸ், அபிமன்யூ சிங், சார்மி, சம்பூர்ணேஷ் பாபு, கோலி சோடா சீதா மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : இமான்
ஒளிப்பதிவு : பாஸ்கரன்
படத்தொகுப்பு : ஸ்ரீகர் பிரசாத்
இயக்கம் : விஜய் மில்டன்
தயாரிப்பாளர் : ஏ.ஆர். முருகதாஸ்

கதைக்களம் :

டிரைவிங் பயிற்சி நிறுவனத்தில் பணிபுரியும் விக்ரம் (ஸாரி படத்தில் அவருக்கு ஒரு பெயரில்லை) எதையும் 10 நொடிகளில் அதாவது 10 எண்றதுக்குள்ள செய்து முடிப்பவர். இவரிடம் ஒரு காரை கொடுத்து அதை முசோரி (உ.பி.)யில் உள்ள ஒருவரிடம் சேர்க்க சொல்கிறார் பசுபதி. அதில் ஷகீலா (சமந்தா) இருப்பது தெரியாமல் காரை ஓட்டிச் செல்கிறார் விக்ரம்.

அதன்பின்னர் ரொமான்ஸ் செய்யும் இந்த ஜோடி அந்த வில்லனிடம் சேர்கின்றனர். பிறகுதான் சமந்தாவுக்கு இருக்கும் ஆபத்து விக்ரமிற்கு தெரிய வருகிறது. அதன்பின்னர் விக்ரம் செய்யும் சகாசங்களே படத்தின் கதை.

கதாபாத்திரங்கள்…

10 எண்றதுக்குள்ள விக்ரம் செய்யும் ஒவ்வொரு விஷயமும் அசத்தல். (ஆனால் ‘அந்த’ மேட்டர் பற்றி கேட்காதீர்கள்.. அய்ய்ய்யய்யே…) அறிமுக காட்சி முதல் க்ளைமாக்ஸ் வரை தனித்து நிற்கிறார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் படு ஜாலியான விக்ரம். அடிதடி, கலாட்டா என அமர்களம் செய்திருக்கிறார். வீ லைக் தட். அதிலும் சமந்தா ஜோடி சூப்பர்.

சமந்தா…. ரொமன்ஸிலும் சண்டையிலும் குறை வைக்காத இவர், கவர்ச்சியிலும் நம்மை கவர்கிறார். இவரின் சொந்த குரல் நன்றாகவே கைகொடுத்துள்ளது. கதையோடு ஒன்றாமல் நாயகியோடு கதை ஒன்றிச்செல்கிறது. எனவே தன் பங்கில் பர்ஸ்ட் கிளாஸ் பெறுகிறார்.

பசுபதி தன் பாத்திரத்தில் ஜொலிக்கிறார். காமெடி வில்லனாக கலக்கியிருக்கிறார். முனீஸ்காந்த் சில காட்சிகளில் வந்தாலும் மனதில் நிற்கிறார்.

இவர்களுடன் ராகுல் தேவ், அபிமன்யூ சிங், இமான் அண்ணாச்சி, ஐட்டம் பாட்டுக்கு சார்மி என அனைவரும் அவரவர் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.

 தொழில்நுட்ப கலைஞர்கள்…

இமான் இசையில் ‘விரூம் விரூம்’ பாடல் ரசிகர்களை அப்ளாஸை அள்ளுகிறது. அதுவும் ஸ்ரீதரின் நடனம் பாடலுக்கு பலம் சேர்த்துள்ளது. ‘ஆனாலும் இந்த மயக்கம்’ பாடல் கேட்கும் ரகம்.

ஆனால் பாடல்கள் முழுமையாக இல்லாமல் இடையே இடையே வசனங்களுடன் வருகிறது. முக்கியமாக ‘தெலுங்கானா’ பாடல் சண்டைகளுடன் வருகிறது. அனுப் சீலின் பின்னணி இசை சில இடங்களில் ஓகே ரகம்.

படத்தின் ப்ளஸ்

  • விக்ரமின் ஸ்டைலிஷ் லுக்
  • இளமை துள்ளும் சமந்தா
  • சண்டை காட்சிகள்

படத்தின் மைனஸ்

  • முதல் 2 மணி நேரம் தெரியாத கதை
  • படத்தின் மிகப்பெரிய நீ….ளம்
  • மிரட்டாத வில்லன்கள்
  • மனதில் ஒட்டாத தங்கை பாசம்

ஒளிப்பதிவாளர் பாஸ்கரன் கைவண்ணத்தில் வட இந்தியா காட்சிகளும் சண்டை காட்சிகளும் சபாஷ். அதற்கு எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தும் கைகொடுத்திருக்கிறார். ஆனால் படத்தின் ஓவர் நீ….ளம் என்ன ஆச்சு சார்?

‘கோலி சோடா’ விஜய்மில்டன் தன் முதல் படத்தில் கைகொடுத்த கேரக்டர்களை இதிலும் பயன்படுத்தியுள்ளார். காதலை சொல்லாமல் விக்ரம் சமந்தா ரொமான்ஸ் காட்சிகள் அருமை. முற்றிலும் ரோட்டில் பயணிக்க விட்டு ட்விஸ்ட் வைத்திருக்கிறார். ஆனால் வசனத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் ‘10 எண்றதுக்குள்ள’ : விக்ரம்-சமந்தாவின் ட்ரீட்

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்