ஆகம் விமர்சனம்

தீக்ஷிதா மற்றும் ஜெயஸ்ரீ ஆகிய இரண்டு நாயகிகளுடன் இர்பான் நடித்துள்ள படம் இது. ஆகம் என்றால் வந்தடைதல் என்று பொருள்படும். இவர்களின் கூட்டணியில் படம் எப்படி என்பதை பார்ப்போம்…

நடிகர்கள் : இர்பான், தீக்ஷிதா, ஜெயஸ்ரீ, ஜெயபிரகாஷ், ரியாஸ் கான், ரவி ராஜா, அர்ஜீன், ஒய். ஜி. மகேந்திரன் மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்
படத்தொகுப்பு : மனோஜ் ஜியான்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா
இயக்கம் : விஜய் ஆனந்த் ஸ்ரீராம்
தயாரிப்பாளர் : கோட்டீஸ்வர ராஜீ

நாயகன் இர்பான் எம்பிஏ படிக்கும் மாணவன். இவர் Don’t Quit India Movement என்ற ஒரு நிறுவனத்தை நடத்தி அதன் மூலம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறார்.

மேலும் இந்தியனாய் இரு, இந்தியாவிலே இரு என்பதை தாரக மந்திரமாய் நினைத்து வாழ்ந்து காட்டுகிறார். ஆனால் இவரது அண்ணனோ இவருக்கே தெரியாமல் ரியாஸ்கான் மூலம் அமெரிக்கா சென்று விடுகிறார். இதனால் ஊருக்கு தான் உபதேசம் என இர்பான் மீது பழி விழுகிறது.

 

Aagam still1

 

இதனிடையில் நாயகனின் உறவுக்காரர் ஜெயப்பிரகாஷும் நம் நாட்டை வல்லரசாக மாற்ற பல திட்டங்களை தீட்டி வருகிறார். ஆனால் அதனை செயல்படுத்த முடியாமல் பண நெருக்கடியால் தவிக்கிறார்.

இதனையறிந்த ரியாஸ் கான் மற்றும் அவரது தந்தையும் மனித வள மேம்பாட்டு மத்திய அமைச்சருமான ஒய் ஜி மகேந்திரமான உதவ முன்வருகின்றனர்.

 

Aagam still2

 

இந்த திட்டம் மூலம் பல கோடி ரூபாயை சுருட்ட நினைக்கின்றனர்.

இதனை தெரிய வரும் இர்பானும் ஜெயப்பிரகாஷும் எப்படி அவர்களது திட்டங்களை முறியடித்து இந்தியாவை வல்லரசாக மாற்றுகின்றனர் என்பதே ஆகம்.

கதாபாத்திரங்கள்..

இர்பானுக்கு அவருக்கு வயது ஏற்ற வேடம். எல்லாம் வளமும் இருக்கும் நம் தாய் நாட்டை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடு செய்யும் ஒவ்வொரு விஷயமும் நச்.

தெருக்களை சுத்தம் செய்வது முதல், காதலிக்காக ஏங்குவது என ஒவ்வொன்றிலும் தன் நடிப்பை உணர்த்தியிருக்கிறார்.

 

Aagam still3

 

இவரை அடுத்து, ஜெயபிரகாஷ் மற்றும் ரியாஸ்கான் இருவரும் நன்றாகவே ஸ்கோர் செய்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு ரியாஸ்கான் தன் ஸ்மார்ட்டான வில்லனத்தனத்தால் முத்திரை பதிக்கிறார்.

இவர்களுடன் தீக்ஷிதா, ஜெயஸ்ரீ, ரவிராஜா, ஸ்ரீரஞ்சனி, புதுமுகங்கள் அர்ஜுன், ஆலியோனா முன்டினு ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை செய்துள்ளனர்.

 

Aagam still4

 

ஸ்ரீரஞ்சனி அவர்களுக்கு என்னாச்சு..? திடீரென இவ்வளவு குண்டு..? (கவனிக்கவும்) நாயகனின் அண்ணியாக வரும் மாயா சில காட்சிகள் என்றாலும் மனதில் நிற்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஆர்.வி.வி.சரணின் ஒளிப்பதிவில் சில காட்சிகள் ஓகே. ப்ளாஸ் பேக் காட்சிகளுக்கும் இன்றைய காட்சிகளுக்கும் பெரிதாக வேறுபாடு இல்லை. அதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

 

Aagam still5

 

படத்தின் ப்ளஸ்…

  • கதையின் மையக்கரு
  • கதாபாத்திரங்கள

படத்தின் மைனஸ்…

  • சொல்வது எளிது.. செய்வது அரிது என்பது போல சொல்ல நினைத்த கருத்துகளை காட்சியாக அமைப்பதில் இயக்குனர் தடுமாறி இருக்கிறார்.
  • கிராபிக்ஸ் ஆகவும், வாய் வார்த்தைகளாகவும் செயல் திட்டங்களை சொல்லிவிடுவது சலிப்பை தட்டி விடுகிறது.

 

Aagam still6

 

விஷால் சந்திரசேகர் இசையில் பாடல்கள் ஜஸ்ட் ஓகே. திரைக்கதை-வசனத்தை ஜினேஷ் எழுதியிருக்கிறார். வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம் கதை எழுதி டைரக்டு செய்துள்ளார்.

தன் முதல் படத்திலேயே இப்படி ஒரு வலுவான படத்தை கொடுத்த இயக்குனரை பாராட்டலாம்.

மொத்தத்தில் ஆகம்.. அர்த்தமுள்ள முயற்சி..!

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்