‘ஆம்பள’ விமர்சனம்

நடிப்பு: விஷால், ஹன்சிகா, சந்தானம், பிரபு, சதீஷ், ரம்யா கிருஷ்ணன், கிரண்

இசை: ஹிப்ஹாப் தமிழா ஆதி

இயக்கம்: சுந்தர் சி

தயாரிப்பு: விஷால்

படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று சொன்னபடி படத்தை தைரியமாக களம் இறங்கியிருக்கிறார் இந்த “ஆம்பள” தயாரிப்பாளர். அதனால்தானோ என்னவோ, படத்தில் ஆங்காங்கே அரசியல் வசனம் பளிச்சிடுகிறது. ‘உங்க வேலைய நீங்க சரியா பார்த்தா நான் ஏன் சார் உங்க இடத்துக்கு வரப்போறேன்…” “பாசமா பேசினாலே பொளந்து கட்டுவேன். பந்தயம் வேற கட்டிடீங்க பட்டய கிளப்புறேன்“ என்ற பன்ச் டயலாக்கோடு களம் இறங்கியுள்ளார் விஷால். கதை இல்லாமல் லாஜிக் மறந்து காமெடி படம் பண்ணியிருக்கிறார் இயக்குனர் சுந்தர். சி.

கதை சுருக்கம் : அரசியல் மற்றும் பொதுகூட்டங்களுக்கு ஆள் சேர்க்கும் கமிஷன் ஏஜென்ட் விஷால். இவர் கை அசைத்தால் போதும் கூட்டம் கோஷமிடும். இந்நிலையில் தன் தந்தையை தொலைத்துவிட்டு தன் தாயில் வளர்ப்பில் வளர்கிறார். பின்பு, தன் தந்தை பிரபு இருக்கும் இடம் தெரிந்து அவரை தேடி வருகிறார். தன் தந்தையான பிரபுவையும் தன் தம்பியான சதீஷ்யையும் கண்டுபிடிக்கிறார். இதனிடையே பிரபுவின் முன்னாள் காதலியின் மகனாக வைபவ்-வும் கூடவே வருகிறார்.

பிரிந்துபோன தங்கள் குடும்பத்தை ஒன்று சேர்க்க பிரபு, தன் 3 தங்கையின் 3 மகள்களையும் தன்னுடைய 3 மகன்களுக்கும் மணமுடிக்க நடத்தும் பாசம் கலந்த போராட்டமே இந்த ஆம்பள.

விஷால் ஆக்ஷன் காட்சியிலும், காதல் காட்சியிலும் நன்றாகவே செய்திருக்கிறார். காக்கி சட்டை அணிந்து போலீசாக நடிக்கும் காட்சிகளில் உடை அம்சமாக இருந்தாலும், அந்த கம்பீரம் இல்லை. (படத்திற்கு தேவையில்லை என்று நினைத்தாரோ என்னவோ?)

முன்னணி நடிகை பட்டியலில் மெல்ல ஏறிக்கொண்டிருக்கும் ஹன்சிகா இந்த படம் முலம் வேகமாக லிப்ட்டில் ஏறி இருக்கிறார். அறிமுக காட்சியிலும், பாடல் காட்சிகளிலும் கவர்ச்சியை வழங்கியிருக்கிறார். ஹன்சிகா தன் பின்னழகை காட்டி செல்லும் காட்சியில் BACKஐ பார்த்தது போதும் என்று சந்தானம் விஷாலை கண்டிப்பது காம’நெடி’யின் உச்சம். இவர் போதாது என்று, இவரின் சித்தியாக வரும் ‘ஜெமினி’ கிரண் நம்மை கிறங்கடிங்கிறார். சந்தானமும் இவரும் வரும் காட்சிகள் ரசிகர்களுக்கு கவர்ச்சி மழைதான்.

விஷால்-ஹன்ஸிகா சந்திக்கும் ஒவ்வொரு காட்சியிலும் விதியே காரணமாக அமைவதும், அது விஷாலுக்கு சாதகமாகவும், சந்தானத்துக்கு பாதகமாகவும் அமைவதும் கதாசிரியரின் சாமர்த்தியம். மனோபாலா சந்தானம் காமெடி காட்சிகள் படத்தின் ப்ளஸ். இடையில் திரைக்கதையில் காணாமல் போகும் சந்தானத்தின் இடத்தை தன் காமெடியால் சதீஷ் நிரப்புகிறார். (வெல்டன் பாய்ஸ்)

படத்தின் அதிவேகம் இடையிடையே இயக்குனர் ஹரியின் படத்தை நம் கண்முன்னே கொண்டு வருகிறது. குஷ்பு ஒரு பாடலில் தோன்றும்போதுதான் இது சுந்தர் சியின் படம்தான் என்று நமக்கு ஞாபகம் வருகிறது.

ஹிப் ஹாப் தமிழா புகழ் ‘ஆதி’ யின் பாடல்கள் ஒரே ரகமாக இருந்தாலும் கேட்கும்படியாக உள்ளது. முக்கியமாக பழகிக்கலாம் பாடல் நன்றாகவே உள்ளது. பின்னணி இசை முதல்படத்திற்கு ஓகே.

மொத்தத்தில் லாஜிக் இல்லா இந்த ‘ஆம்பள’ மேஜிக் செய்திருக்கிறார்.

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்