ஆறாது சினம் விமர்சனம்

மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற மெமரீஸ் படத்தின் ரீமேக் இப்படம் என்றாலும், தமிழுக்காக நிறைய மாறுதல் செய்துள்ளாராம் இயக்குனர். ஈரம் என்ற அருமையான படத்தை இயக்கிய அறிவழகனும் அருள்நிதியும் இணைந்துள்ள இந்த கூட்டணி எப்படி என்பதை பார்ப்போம்…

நடிகர்கள் : அருள்நிதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா தத்தா, ராதாரவி, அனுபமா குமார், துளசி, ஆர் என் ஆர் மனோகர், ரோபா சங்கர், சார்லி, ரமேஷ் திலக் மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : எஸ். தமன்
ஒளிப்பதிவு : அரவிந்த் சிங்
படத்தொகுப்பு : ராஜேஷ் கண்ணன்
கதை : ஜீத்து ஜோசப்
இயக்கம் : அறிவழகன்
தயாரிப்பாளர் : என் ராமசாமி

கதைக்களம்…

போலீஸ் அருள்நிதி ஒரு என்கௌண்டர் ஸ்பெஷலிஸ்ட். ஒருமுறை ரவுடி ஒருவரின் மனைவியை சுட்டுக் கொன்று விடுகிறார். அதன்பின்னர் அந்த ரவுடி அருள்நிதியின் மனைவி மற்றும் மகளை கொள்ள, ரவுடியை இவர் கொல்கிறார்.

மனைவி, மகளை இழந்த அருள்நிதி பாட்டிலும் பாட்டுமாக இருக்கிறார். இதனிடையில் ஊரில் ஒரே மாதிரியான கொலைகள் அடுத்தடுத்து நடக்கின்றன.

இந்த கேஸை ரோபோ சங்கர், சார்லி ஆராய்ந்தாலும் ஒன்றும் பிடிபடவில்லை. எனவே உயரதிகாரி ராதாரவி, அருள்நிதியை அழைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க சொல்கிறார். அதன் பின்னர் அருள்நிதி எப்படி கண்டுபிடித்தார் என்பதே ஆறாது சினம்.

கேரக்டர்கள்…

அலட்டிக் கொள்ளாத அருள்நிதி. மனைவி மற்றும் குழந்தைக்காக ஏங்குவது, தம்பியை காப்பாற்ற போராடுவது என யதார்த்தமாக நடித்திருக்கிறார்.

ஆனால் போலீஸ் டூட்டியில் எப்போதும் சரக்குடன் சுற்றிவருவது நம்பும்படியும் இல்லை ரசிக்கும்படியும் இல்லை.

arulnithi

ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஐஸ்வர்யா தத்தா என இரண்டு நாயகிகள் இருந்தும் அவர்களுக்கு பெரிய வேலைகளை இயக்குனர் கொடுக்கவில்லை.

சினிமா போலீஸ் ரோபா சங்கர் காக்கி உடையில் கம்பீரமாக இருந்தாலும், காமெடி அதற்கு பொருத்தமாக இல்லை. அட்லீஸ்ட் வேறு ஒரு ட்ராக் அவருக்கு கொடுத்திருக்கலாம். ராதாரவி மற்றும் சார்லி இருவரும் தங்கள் அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

வில்லன் இயக்குனர் கௌரவ், கொஞ்சம் காட்சியே என்றாலும் தன் கேரக்டரை பேச வைத்திருக்கிறார். யார் இவர்? என ஏங்க வைத்து ட்விஸ்ட்டுகளை அவிழ்ப்பது நச்.

இவர்களுடன் போஸ் வெங்கட், அனுபமா குமார், துளசி, ஆர் என் ஆர் மனோகர், ரமேஷ் திலக் ஆகியோர் பாஸ் மார்க் பெறுகிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

தமனின் இசையில் பாடல்கள் ஓகே ரகம், அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவில் என்கௌண்டர் காட்சிகள் மற்றும் ப்ளாஷ்பேக் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

படத்தொகுப்பு செய்துள்ள ராஜேஷ் கண்ணன் இரண்டாம் பகுதியை மட்டுமே கவனத்தில் கொண்டுள்ளார். முதல் பகுதி எடிட்டிங் போது எங்கே சென்றாரோ?

படத்தின் ப்ளஸ்…

  • கொலைகளை யார் செய்திருப்பார்? என ஏங்க வைத்திருப்பது நச்.
  • இரண்டாம் பகுதியின் காட்சி அமைப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகள்
  • பின்னணி இசை + ப்ளாஷ் பேக்

Aarathu-Sinam-Movie Stills

படத்தின் மைனஸ்…

  • பெண்கள் தவறு செய்ய, அவர்களது கணவர்களை ஏன் கொல்ல வேண்டும். ஒரு வேளை தன் அக்கா விதவை ஆகிவிட்டார் அதனால் அப்படி என்று ஒரு வரியாவது சொல்லி இருக்கலாம்.
  • எப்போதும் சரக்கு அடித்தாலும் போலீஸ் டூட்டியில் சரியாக இருக்கிறார் என அருள்நிதிக்கு ராதாரவி சர்போர்ட் செய்வது எப்படி நியாயம்? சரக்கு அடித்தாலும் வண்டி சரியாக ஓட்டினால் விட்டு விடுவார்களா என்ன?
  • திருமணமான ஐந்து பெண்களுமே தமிழ்நாட்டில்தான் செட்டில் ஆகி இருக்க வேண்டுமா என்ன? சரியாக கிறிஸ்துவ மத குறியீடு (+) தமிழ்நாட்டிலே அமைகிறதே. அது ஹீரோவுக்கும் கரெக்டாக தெரிகிறதே.

ஜீத்து ஜோசப் கதைக்கு வண்ணம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அறிவழகன். கொலையை ஏயேசு மற்றும் கிறிஸ்துவ மதத்துடன் கொண்டு செல்வது ரசிக்கும்படியாக இருக்கிறது. அடுத்தடுத்தான கொலைகள் அதற்கான ட்விஸ்ட் திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டியுள்ளது.

மொத்தத்தில் ஆறாது சினம்… அமைதியான வனம்.!

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்