வேதாளம் பாடல் விமர்சனம்

அஜித்-அனிருத் கூட்டணியில் முதன்முறையாக உருவாகியுள்ள ‘வேதாளம்’ படத்தின் பாடலுக்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் இப்பாடலை இன்று அனிருத் பிறந்த நாளில் வெளியிட்டுள்ளனர். இந்த பாடல்கள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்…

1) ‘வீர விநாயகா…’
பாடலாசிரியர் : விவேகா
பாடியவர்கள் : அனிருத், விஷால் தட்லானி

விநாயகரின் பெருமை சொல்லும் பாடலாக தொடங்கினாலும் படத்தில் அஜித்தின் பெயர் கணேஷ் என்பதால் அவரின் புகழும் சேர்ந்தே ஒலிக்கிறது. நீ வுட்டு விளாசு… வுட்டு விளாசு இனி உன் காலம்தான் என ரசிகர்களை உற்சாப்படுத்தும் வரிகளும் அமைந்துள்ளது. கிராமப்புற ரசிகர்களை இப்பாடல் மிகவும் கவரும்.

2) ‘டோன்ட் யூ மெஸ் வித் மீ…’ (Don’t you mess with me)
பாடலாசிரியர் : மதன் கார்க்கி
பாடியவர்கள் : ஸ்ருதிஹாசன், சக்தி ஸ்ரீ கோபாலன்

இப்பாடல் இனி இளைஞர்களின் காலர் ட்யூனாக மாறினாலும் ஆச்சரியம் இல்லை. பெண்களிடம் குழையாத நல்லவனே என அஜித்தின் பின்னாடி ஸ்ருதி சுற்றுவதாக பாடல் அமைந்துள்ளது. மேலும் எத்தனை காலம் நல்லவனாக நடிப்பியோ என்ற மங்காத்தா பன்ச் வரிகளும் இதில் இடம் பெற்றுள்ளது. இப்பாடலை ஸ்ருதி அருமையான குரலில் பாடியிருந்தாலும், இடையில் உச்சரிக்கும் அவரது வசனக் குரல் ஏனோ பாடலின் இனிமையை குறைக்கிறது.

3) ‘உயிர் நதி கலங்குதே…’
பாடலாசிரியர் : விவேகா
பாடியவர் : ரவிசங்கர்

ஒரு நேச மேகம்… உயிர் தீண்டும் நேரம்… என்ற அழகான கவிதை வரிகளுடன் இப்பாடல் துவங்குகிறது. ரவிசங்கரின் குரலில் அருமையான மெலோடியாக உள்ளது. அண்ணன் தங்கையின் ஆழமான பாசத்தை வரிகள் உணர்த்துகிறது. இடை இடையே உணர்ச்சிமிகுந்த வரிகளும் உள்ளது.

4) ‘ஆலுமா… டோலுமா…’
பாடலாசிரியர் : ஜி. ரோகேஷ்
பாடியவர்கள் : அனிருத் மற்றும் பாட்ஷா

‘டங்கா மாரி ஊதாரி ஸ்டைலில்…’ தர லோக்கல் பாடலாக இது அமைந்துள்ளது. குத்து பாடலாகவும் தாளம் போட வைக்கும் வகையில் அமைந்துள்ளது. முழுக்க முழுக்க கானா பாடல் ஸ்டைலில் சென்னை பாஷையை கொண்டுள்ளது. இடையில் வரும் ‘கெத்து விடாத… கெத்து விடாத…’ என்ற வரிகளை, இனி விடாமல் கெட்டியாக பிடித்துக் கொள்வார்கள் ரசிகர்கள்.

5) ‘தி தெறி தீம்…’
பாடலாசிரியர் : இயக்குனர் சிவா
பாடியவர் : அனிருத்

இனி இது அஜித்தின் மாஸ் பாடலாக வாய்ப்புள்ளது. தெறி… தெறி.. என பாடலை தன் குரலில் தெறிக்க விட்டுள்ளார் அனிருத். ஆனால் இப்பாடல் இரண்டு நிமிடங்கள் கூட இல்லை.

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்