அஞ்சல விமர்சனம்

ஜஸ்ட் ஒரு காபி சாப்பிடலாமா? என்று காதலர்கள் கேட்கும் காட்சிகளே இப்போதுள்ள படங்களில் அதிகமாக வருகிறது. இந்த நிலையில் கிராமத்தில் ஒரு டீ கடையை மையப்படுத்தி வந்துள்ள படமே ‘அஞ்சல’. இந்த தேநீரை கொஞ்சம் சுவைத்து விட்டு வருவோமா?

நடிகர்கள் : விமல், நந்திதா, பசுபதி, ஆர் வி உதயகுமார், சுப்பு பஞ்சு, ஆடுகளம் முருகதாஸ் மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : கோபி சுந்தர்
ஒளிப்பதிவு : ரவி கண்ணன்
படத்தொகுப்பு : பிரவீன் கே.எல்.
இயக்கம் : தங்கம் சரவணன்
தயாரிப்பாளர் : திலீப் சுப்பராயன்

கதைக்களம்..

சுதந்திரத்திற்கு முன்பே ஆள்நடமாட்டமில்லாத ஒரு நிலத்தில் மக்களின் தேவைக்காக அஞ்சல தேநீர் கடை ஒன்றை துவங்குகிறார் பசுபதியின் தாத்தா. அவர் மறைந்தாலும் ஒரு ஊரே உருவாக காரணமாகிறது இந்த டீக்கடை. இதனால் விமல் உள்ளிட்ட பல இளைஞர்கள் சேரும் இடமாக அது உருவெடுக்கிறது.

100 ஆண்டுகளுக்கு பின், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக அந்த கடையை இடிக்க அரசு உத்தரவிடுகிறது. இதனால் பசுபதியுடன் இணைந்து ஊரே போராட தயாராகிறது.

இதனிடையில் வில்லன் சுப்பு பஞ்சுவை சாராயம் கேசில் சிக்க வைக்கிறார் பசுபதி. மேலும் கடைக்கு ரெகுலராக வரும் விமலின் நண்பரால் கள்ளப்பணம் குற்றச்சாட்டில் சிக்குகிறார் பசுபதி. எனவே கடை சீல் வைக்கப்படுகிறது.

அதன் பின்னர் அஞ்சல கடை என்ன ஆனது-? விமல் என்ன செய்தார்? வில்லனிடம் இருந்து எப்படி பசுபதி தப்பித்தார்? என்பதே படத்தின் கதை.

கதாபாத்திரங்கள்…

படத்தின் நாயகன் டீக்கடைதான். இதைச் சுற்றியே காட்சிகள் எல்லாம் அமைகிறது. ஓரிரு காட்சிகள் மட்டுமே வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.

விமல் வழக்கம்போல் வருகிறார். இதில் ஊர் சுற்றாமல் டீக்கடையை சுற்றியிருக்கிறார். ஒரு பைக் சர்வீஸ் சென்டர் வைக்க லோன் கேட்டு லோ லோ அழைகிறார். காதல் காட்சிகள் பெரிதாக இல்லை. ஆக்ஷன் சுத்தமாக இல்லை.

நந்திதா, அவராகவே வந்து காதலை சொல்கிறார். தனது அழகான கிராமத்து முகபாவனைகளால் ரசிகர்களை கவர்கிறார்.

பசுபதி இரு கெட்டப்புகளில் வருகிறார். ப்ளாஷ் பேக் காட்சிகளில் கவர்கிறார். நிகழ்கால கதையில் எக்ஸ்பிரஷன் எல்லாம் ஒரே போல உள்ளது. அடிக்கடி நல்லது சொல்வது, அட்வைஸ் செய்வது ரொம்பவே போரடிக்கிறது.

ரித்விகாவின் பெயரே அஞ்சல. இவர்தான் மற்றொரு நாயகி என்றாலும் இவருக்கான காட்சிகள் குறைவு. யார் என்று தேடுவதற்குள் மறைகிறார்.

இவர்களுடன் சுப்பு பஞ்சு, இமான் அண்ணாச்சி இருக்கிறார்கள் அவ்வளவே.  ஆடுகளம் முருகதாஸ் ஓரளவு ஆறுதல் தருகிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

கோபி சுந்தர் இசையில் ஒரு பாடல் ஓகே. மற்றவை மனதில் நிற்க மறுக்கிறது. ரவிகண்ணனின் ஒளிப்பதிவில் ப்ளாஷ்பேக் காட்சிகள் நன்றாக இருக்கிறது. டீக்கடையே சுற்றி வந்தாலும், இன்னும் கொஞ்சம் சிறப்பாக காட்டியிருக்கலாம்.

படத்தின் ப்ளஸ்…

  • ப்ளாஷ்பேக் காட்சிகள்
  • விமலின் லோன் பணத்தில் அஞ்சல கடை ட்விஸ்ட்
  • பாரம்பரியம் மிக்க வியாபாரம்

படத்தின் மைனஸ்…

  • காமெடி ஆக்ஷன் எதுவும் இல்லை
  • முகபாவனைகளில் மாற்றமில்லாத வசனங்கள்
  • சிரிக்கும்படியான சீரியஸ் வசனங்கள்

தங்கம் சரவணன் எடுத்துக் கொண்ட கதைக்களம் புதியது. ஆனால் சொல்ல வந்ததை நேரிடையாக சொல்லாமல், சாராயம் காரணத்தை கூறி வில்லனை உள்ளே கொண்டு வந்திருக்கிறார்.
நெடுஞ்சாலை பிரச்சினையின் நடுவே கள்ளப்பணம் புகார் என சுற்ற விட்டு இருக்கிறார்.

மொத்தத்தில் ‘அஞ்சல’ … தம்பி டீ இன்னும் வரல…

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்