டார்லிங் 2 விமர்சனம்

கடந்த வருடம் வெளியாகி ரசிகர்களை பயமுறுத்திய டார்லிங் படம் வெற்றியடைந்தது. எனவே அதே ரூட்டில் புதிய பயணிகளுடன் இப்படமும் வந்துள்ளது. இந்த பயணம் எப்படி என்பதை பார்ப்போம்…

நடிகர்கள் : கலையரசன், மெட்ராஸ் ஹரி, காளி வெங்கட், அர்ஜுனன், ‘முண்டாசுப்பட்டி’ முனீஸ் காந்த், ரமீஸ் ராஜா, மாயா மற்றும் பலர்.
இசை : ரதன்
ஒளிப்பதிவு : விஜய் கார்த்திக் கண்ணன்
படத்தொகுப்பு : மதன்
இயக்கம் : சதீஷ் சந்திரசேகரன்
பிஆர்ஓ : சுரேஷ் சந்திரா
தயாரிப்பாளர் : ஞானவேல் ராஜா (ஸ்டூடியோ க்ரீன்)

கதைக்களம்…

கலையரசன், காளி, ரமீஸ், அர்ஜீனன், ஹரி, உள்ளிட்ட ஆறு நண்பர்கள் ஒன்றாய் இருக்கிறார்கள். அதில் ஒரு நண்பர் ராம் காதல் தோல்வியால் இறந்துவிடுகிறார்.

ஒரு வருடத்திற்கு பிறகு, கலையரசனுக்கு நிச்சயம் நடக்கவுள்ளது. எனவே பேச்சுலர் பார்ட்டி கொண்டாட வால்பாறைக்கு ட்ரிப் அடிக்கின்றனர் ப்ரெண்ட்ஸ்.

அங்கு ஒரு கெஸ்ட் ஹவுஸில் தங்கும்போது மரணமடைந்த நண்பர் பேயாக வருகிறார். தன் மரணத்திற்கு காரணம் அந்த நண்பர்களில் ஒருவன்தான் என நினைத்து அவனை கொல்ல வருகிறார். இவருடன் காதலியும் சேர்ந்து கொள்கிறார்.

darling 2 movie poster

இறந்து போன நண்பர், உயிருடன் இருக்கும் நண்பனை கொல்ல நினைப்பதை அறிந்த மற்ற நண்பர்கள் என்ன செய்தார்கள்? நண்பன் பேய் நண்பனையே கொல்ல நினைப்பது ஏன்..? அவர்கள் எப்படி தப்பித்தார்கள்? என்பதே மீதிக்கதை.

கதாபாத்திரங்கள்…

நண்பர்கள் அனைவரும் கச்சிதம். இவர்களுடன் வால்பாறை வரதன் முனீஸ்காந்தும் சேர்ந்து கொள்கிறார். இவர்களின் நட்பில் போதுமான நெருக்கம் இல்லை.

கலையரசன் குற்ற உணர்ச்சியில் தவிக்கும் காட்சிகள் அருமை. அதற்காக ஒரு நண்பர்கள் ஆடி பாடும் காட்சியிலும் அப்படியே வருவது நியாயமா?

இதில் ரமீஸ், ரசிகர்களின் கவனம் ஈர்க்கிறார். இனி வாய்ப்புகள் தேடி வரலாம்.

நம் ஹீரோயின்களின் ப்ரெண்டாக அடிக்கடி பார்த்த முகமாக இருக்கிறதே என்று பார்த்த்தால். அட இது நம்ம மாயாதான் என்று அறிமுகமாகிறார் நாயகி. கண்களால் நட்பு பேசி, உதடுகளால் காதல் பேசுகிறார்.

ஒருவேளை இவருக்காகத்தான் டார்லிங் என்று தலைப்பு வைத்தார்களோ என்னவோ…?

darling 2 maya

தொழில்நுட்ப கலைஞர்கள்…

விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு கூடுதல் பலம் சேர்க்கிறது. முக்கியமாக சொல்லட்டுமா என்ற பாடல் இன்னும் ஒருமுறை கேட்கட்டுமா? என தோன்ற வைக்கிறது.

பொதுவாக பேய் படம் என்றால் இசைதான் மிரட்டும். இதிலும் அப்படிதான். ரதன் இசையமைப்பில் பயம் நம்மை தொற்றிக் கொள்கிறது. ஆனால் அடிக்கடி தாயம் உருட்டி விளையாடுவது எதற்கு? என்றே தெரியவில்லை. அந்த இசையே அடிக்கடி வருவது கொஞ்சல் போர்தான்.

படத்தின் ப்ளஸ்…

  • விளையாட்டாக செய்யும் சில விஷயங்கள் ஒரு மரணத்தை கூட கொடுக்கும் என்ற கருத்து பசுமரத்து ஆணி போல் மனதில் பதிகிறது.
  • இடைவேளை மற்றும் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் ஓகே.
  • பேய் பயத்தில் உருளைகிழங்கு சிப்ஸை ஊறவைத்து சாப்பிடும் காட்சி நல்ல டைமிங் காமெடி.
  • காட்டுக்குள் யானை கிராபிக்ஸ் காட்சி
  • சொல்லட்டுமா பாடலும் நாயகி மாயாவின் அழகும்.

படத்தின் மைனஸ்…

  • விளையாட்டாக செய்தேன் வினையாக ஆகிவிட்டது என்று கலங்குபோது கலையரசனின் கண்களில் சீரியஸ்னெஸ் இல்லை.
  • நண்பர்கள் பேசும் டயலாக்குகள் டைரக்டரிடம் கேட்டு கேட்டு பேசுவது போல உள்ளது. ஒவ்வொரு டயலாக்குகளும் அவ்வளவு கேப்.
  • நெருங்கிய நண்பர்கள் என்கிறார்கள். ஆனால் நட்புக்குள் நடப்பது அவர்களுக்கே தெரியவில்லை.
  • மனதில் ஒட்டாத நண்பர்கள் பாடல்.

darling team

சதீஷ் சந்திரசேகரின் இயக்கத்தில் ஒரு புதிய முயற்சி. கொஞ்சம் காட்சிகளை நீக்கி விட்டு பார்த்தால் படம் ஓகேதான். நண்பனை எதற்காக கொல்லனும்..? உயிர் கொடுப்பவன்தான் நண்பன் என்ற பன்ச் நட்பை பாராட்டுகிறது.

கிட்டதட்ட முனீஷ்காந்த், காளிவெங்கட், அர்ஜீனன் என மூன்று காமெடியர்கள் இருந்தும் காமெடி குறைவே. சற்று காமெடியில் கவனம் செலுத்தி இருந்தால் இன்னும் மிரட்டி இருக்கலாம்.

மொத்தத்தில் டார்லிங் 2… பேய் ப்ரெண்ட்ஸ்..!

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்