ஹலோ நான் பேய் பேசுறேன் விமர்சனம்

என்னதான் பங்களா, சுடுகாடு என பல ஆண்டு காலமாக பேய் பயமுறுத்தி வந்தாலும் தற்போது தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது அல்லவா. எனவே இந்தப் படத்தில் செல்போன் மூலம் பேய் உருவாகியுள்ளது. இந்த பேய் எப்படி பேசுகிறது என்பதை பார்ப்போமா..?

நடிகர்கள் : வைபவ், ஓவியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன், விடிவி கணேஷ், சிங்கப்பூர் தீபன், சிங்கம் புலி மற்றும் பலர்.
இசை : சித்தார்த் விபின்
ஒளிப்பதிவு : பானு முருகன்
படத்தொகுப்பு : என் பி ஸ்ரீகாந்த்
இயக்கம் : எஸ் பாஸ்கர்
பிஆர்ஓ : ரியாஸ் கே அஹ்மத்
தயாரிப்பாளர் : சுந்தர் சி (அவ்னி மூவிஸ்)

கதைக்களம்…

திருடிய பொருட்களை சேட் கடையில் விற்று அதில் பிழைப்பு நடத்தி வருவர் வைபவ். ஒருமுறை ஐஸ்வர்யாவை சந்திக்கும் இவர் அவர் மேல் காதல் கொள்கிறார்.

அதன்பின்னர் சாவு குத்து ஆடி, ஐஸ்வர்யாவின் அண்ணன்கள் விடிவி கணேஷ் மற்றும் சிங்கப்பூர் தீபன் ஆகியோரின் அனுமதியும் வாங்கி விடுகிறார்.

இதனிடையில் ஓவியா விபத்தில் மரணமடையும் சமயத்தில் அவரது செல்போனை திருடி விடுகிறார் வைபவ். அன்றுமுதல் இவரை சுற்றி வருகிறது ஓவியா பேய்.

அதன்பின்னர் ஒரு கோரிக்கையும் வைக்கிறது பேய்.  கோரிக்கையை நிறைவேற்ற வைபவ் என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதாபாத்திரங்கள்…

திருடனாக வரும் வைபவ் நடிப்பில் முன்னேறி இருக்கிறார். சாவு குத்துக்கு இவர் ஆடும் ஆட்டம் ரசிகர்களையும் ஆடவைக்கும்.

சரக்கு அடிப்பது முதல் சைட் அடிப்பது வரை நன்றாகவே தேறியிருக்கிறார். பேய்யுடன் மாட்டிக் கொண்டு அடிவாங்குவதில் நடிக்கவும் செய்திருக்கிறார்.

இவருடன் விடிவி கணேஷ், சிங்கப்பூர் தீபன் செய்யும் காமெடி ரகளைகள் படத்தின் மிகப்பெரிய பலம். பேயை எதிர்கொள்ள பன்ச் பேசி விடிவி கணேஷ் வசனங்களும், நடிப்பும் அசத்தல்.

இதுநாள் வரை உள்ள படங்களில் ஐஸ்வர்யா நடனம் ஆடி இருக்கிறாரா? எனத் தெரியவில்லை. எல்லாவற்றையும் சேர்த்து இதில் செம குத்து குத்து இருக்கிறார்.

வைபவின் நண்பராக வரும் யோகிபாபு சில காட்சிகளே என்றாலும் மறக்கமுடியாத நபர். கத்தி ஸ்டைல் ப்ளான் போடுவது, ஐஸ்வர்யாவை மிரட்டி காதலிக்க வைப்பது என தன் பங்கை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார்.

கருணாகரனுக்கு காமெடி எதுவும் கொடுக்கவில்லை. ஆனால் அதற்கு பதிலாக ஒரு பாடலை கொடுத்து ஓவியாவை ஜோடியாக கொடுத்து விட்டார்கள்.

படத்தின் பிரதானமே பேய்தான். ஆனால் ஓவியாவே பேயிங் கெஸ்ட் போல்தான் வருகிறார்.

இவர்களுடன் சிங்கம் புலி, சித்தார்த் விபின், ஜாங்கிரி மதுமிதா ஆகியோரும் உள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்….

பானுமுருகனின் ஒளிப்பதிவு, ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பு இரண்டும் பாராட்டும்படி உள்ளது. சித்தார்த் விபின் இசையில் சில்லாக்கு பாடல் தாளம் போடும் ரகம். விஜய் சேதுபதிக்காக மஜா பாடலை கேட்கலாம்.

படத்தின் ப்ளஸ்…

  • செல்போன் பேய் கதை
  • விடிவி கணேஷ் + யோகிபாபு காமெடி
  • கருணாகரனின் டபுள் பொண்டாட்டி ட்விஸ்ட்

படத்தின் மைனஸ்…

  • யோகிபாபுக்கு காமெடியை கம்மியாக வைத்தது.
  • பேய் காட்சிகளில் கண்களுக்கு மட்டும் கருப்பு மை பூசி மற்றவற்றை அப்படியே விட்டுவிடுவதுதான் பேய்க்கான மேக்கப்பா என்றுத் தெரியவில்லை.
  • பேய் கலராக டிரெஸ் போடுவது. டிரெஸ்ஸை அவிழ்த்து பாத்ரூமில் போட்டு வைப்பது.
  • திருடன் ஹீரோ மீது ஹீரோயின் காதல்

டைட்டில் பேய் இருந்தாலும் படத்தின் முதல் பாதி முழுக்க காமெடியுடன் கொண்டு செல்வது புத்திசாலித்தனம். அதனை இரண்டாம் பகுதியில் இன்னும் அதிகமாக்கி இருப்பது டைரக்ஷன் டச்.

ஏ சென்டர் ஆடியன்ஸை விட பி அண்ட் சி சென்டர் ஆடியன்ஸின் வரவேற்பை பெறும்.

மொத்தத்தில் ஹலோ நான் பேய் பேசுறேன்… பேய் பேசுவதை ரசிக்கலாம்…!

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்