இது நம்ம ஆளு (2016) விமர்சனம்

நடிகர்கள் : சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி, ஜெய், சந்தானம், ஜெயப்பிரகாஷ், தீபா ராமானுஜம், மதுசூதனன் ராவ் மற்றும் பலர்.
இசை : குறளரசன்
ஒளிப்பதிவு : பாலசுப்ரமணியம்
படத்தொகுப்பு : பிரவீன் கே.எல்.
இயக்கம் : பாண்டிராஜ்
தயாரிப்பாளர் : சிம்பு சினி ஆர்ட்ஸ் டி ராஜேந்தர்.

 

கதைக்களம்…

ஒரு ஹீரோ + இரண்டு ஹீரோயின்… என்றாலே ஒருவர் முன்னாள் காதலி. ஒருவர் மனைவி என்பது வழக்கமான ஒன்றுதான். அதை பாண்டிராஜ் எப்படி வழங்கியிருக்கிறார் என்பது இப்படம்.

ஒரு பெண்ணை காதலித்து தோல்வி உள்ள ஒருவன், மற்றொரு பெண்ணை நிச்சயிக்கும் போது, அவளிடம் பழைய காதலை சொன்னால் என்ன பிரச்சினை? சொல்லாமல் இருந்தால் என்ன பிரச்சினை? என்பதை குடும்ப உறவுகளுடன் சொல்லியிருக்கிறார் பாண்டிராஜ்.

கதாபாத்திரங்கள்…

இது வழக்கமாக சிம்பு படம் இல்லையென்றாலும், அவருக்கு மிகவும் நெருக்கமான காதல்கள் படம் என்பதால் அதிலும் அசத்தியிருக்கிறார்.

ஒரு லவ்வர் பாயாக வந்து இளைஞிகளை வசியம் செய்கிறார். அதிகாலை காட்சியிலே பெண் ரசிகைகளை அதிகம் பார்க்க முடிந்தது. கோபம், காதல், பாசம், நட்பு என சின்ன சின்ன விஷயங்களில் கூட ஸ்கோர் செய்கிறார்.

டான்ஸ் வேண்டும் என்பதற்காகவே ஒரு பாடல். தவிர்த்திருக்கலாமே சிம்பு.

ina

என்னதான் அழகான ரெண்டு ஹீரோயின் இருந்தாலும் சிம்பு நயன்தாரா கெமிஸ்ட்ரி செம.

காதலில் நம்மை உருக வைக்கும் நயன், க்ளைமாக்சில் அவர் எடுக்கும் விபரீதமான முடிவால் கலங்கவும் வைத்திருக்கிறார். அம்மணிய அடிச்சிக்க ஆளே இல்லை. அழகிலும் நடிப்பிலும் அசத்தல்.

ஆண்டரியாவுக்கு பெரிய ஸ்பேஸ் இல்லையென்றாலும் கண்களால் அழகாய் காதல் மொழி பேசியிருக்கிறார்.

என்னடா… மாறி மாறி காதல் என சிலருக்கு போரடித்தால் இருக்கவே இருக்காரு சூரி. நிமிடத்திற்கு ஒருமுறை கவுண்டர் கொடுத்துக்கிட்டே இருக்காரு. படத்தை தன் வசனங்களால் தாங்கியிருக்கிறார்.

ஜெயப்பிரகாஷ், தீபா ராமானுஜம் உள்ளிட்டோர் பொருத்தமான தேர்வு.

ina 2

இவர்களுடன் சந்தானம் மற்றும் ஜெய் இருவரும் சிறப்பு தோற்றத்தில் வந்து ரசிகர்களை குஷிப்படுத்தி செல்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தின் மிகப்பெரிய பலமாக பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவை சொல்லலாம். காதல் படம் என்பதால் படம் முழுவதையும் கலர்புல்லாக காட்டியிருக்கிறார். அது படத்தை ஆவலாக ரசிக்க வைக்கிறது.

பிரவின் கே எல் இன்னும் கொஞ்சம் எடிட் செய்திருக்கலாம்.

குறளரசனின் இசையில் பாடல்கள் ஓகே ரகம்தான். அழகான காதல் படம் என்பதால் இன்னும் ஒரு மெலோடியான சாங் கொடுத்திருக்கலாம்.

காத்தாக வந்த பொண், ஒரு தலை ராகம் பாடல் கேட்கலாம்.

simbu and soori idhu namma aalu

படத்தின் ப்ளஸ்…

  • பாலசுப்ரமணியத்தின் கலர்ஃபுல்லான ஒளிப்பதிவு
  • சிம்பு நயன்தாராவின் லவ்லியான கெமிஸ்ட்ரி
  • சூரியின் ஒன்லைனர் கவுண்டர் அட்டாக் மற்றும் வசனங்கள்
  • இளைஞர்களுக்கான படம் என்றாலும் சிறிதளவு கூட ஆபாசம் இல்லை.

படத்தின் மைனஸ்…

  • தேவையில்லாத குத்துப்பாடல் (சிம்பு நடனம் ஓகே)
  • குடும்ப உறவுகள் இருந்தாலும் முழுக்க காதலையே மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
  • சிம்புவின் வீட்டை விட்டு சூரி சென்றபின் வரும் சில காட்சிகள்.

pandiraj_soori

சிம்பு நயன் இருவரும் (முன்னாள்) நிஜ காதலர்கள் என்பதால் அந்த ஈடுபாடு தெரிகிறது. இதை சரியாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.

இவர்களின் காதலை சூரியை விட்டு கலாய்க்க வைத்து கைத்தட்டல்களை அள்ளுகிறார்.

சின்ன சின்ன மோதல்கள், விடிய விடிய பேசும் ரொமான்ஸ் என ஒவ்வொன்றையும் ரசித்து காதலர்களுக்காக விருந்தாக்கி இருக்கிறார்.

படம் முழுவதும் மெசேஜ் மற்றும் போன் அழைப்புகள் இருப்பதால் அதை காட்சிப்படுத்திய விதத்தில் ரசிகர்களை கவர்கிறார்.

மொத்தத்தில் இது நம்ம ஆளு… இதான் டுடே லவ்வு..!

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்