கத சொல்லப் போறோம் விமர்சனம்

நடிகர்கள் : பேபி ஷிபனா, பேபி ரவீனா, மாஸ்டர் அரவிந்த் ரகுநாத், மாஸ்டர் அரவிந்த், ஷாமு, அர்ஜீன், ஜெனி, ஆடுகளம் நரேன், விஜயலெட்சுமி, அக்ஷரா, காளி வெங்கட் மற்றும் பலர்.
இசை : பவன்
ஒளிப்பதிவு : ஜெமின் ஜோம் அயாநாத்
படத்தொகுப்பு : விஜய்
இயக்கம் : எஸ் கல்யாண்
பிஆர்ஓ : மௌனம் ரவி
தயாரிப்பாளர் : ரிலாக்ஸ் அட்ஸ் எஸ் கல்யாண்

கதைக்களம்…

கருப்பையில் பிரச்சினையில் இருப்பதால் ஒரு குழந்தை மேல் பிறக்கவே வாய்ப்பில்லாத விஜய்லட்சுமிக்கு அழகான பெண் குழந்தை பிறக்கிறது.

அடுத்த நிமிடமே இவரின் கணவர் ஆடுகளம் நரனை ஏமாற்றும் ஒரு பெண் அந்த குழந்தையுடன் எஸ்கேப் ஆகிறார்.

சில மணி நேரங்களில் அந்த பெண்ணை கண்டுபிடித்தாலும், அந்த பெண் லாரியில் அடிப்பட்டு கோமா நிலைக்கு செல்கிறார்.

எனவே அந்த பெண்னுக்கு நினைவு திரும்பும்வரை போலீஸ் பாதுகாப்புடன் சிகிக்சை செய்கின்றனர். ஆனால் அவர் இறந்து விடுகிறார். அதன்பின்னரும் குழந்தையை தேடி அலைகின்றனர்.

இதுஒரு புறம் இருக்க, மற்றொரு புறம்… பேபி ஷிபனா, பேபி ரவீனா, மாஸ்டர் அரவிந்த் ரகுநாத் உள்ளிட்டவர்கள் பெற்றோர் இன்றி ஆசிரமத்தில் வளர்ந்து வரும் குழந்தைகள்.

இவர்களில் யார் அந்த தம்பதியரின் குழந்தையாக இருக்கும்? என நம்மை ஏங்க வைத்து ஒரு உணர்ச்சி மிகுந்த பாசப்போராட்டமே நடத்தியுள்ளார் கல்யாண்.

Kadha Solla Porom  5

கதாபாத்திரங்கள்…

ஆடுகளம் நரேன் விஜயலட்சுமி தம்பதியர் அருமையான நடிப்பை கொடுத்துள்ளனர். பெற்ற குழந்தையை மறுநிமிடமே தொலைத்து நிற்கும் ஒரு தாயின் உணர்வை பிரதிபலிக்கிறார் விஜயலட்சுமி.

ஆசிரமம் மற்றும் வெளியில் உள்ள குழந்தைகள் என குட்டீஸ் பட்டாளங்கள் இருந்தாலும், பேபி ஷிபனா, பேபி ரவீனா, மாஸ்டர் அரவிந்த் ரகுநாத் ஆகியோர் நம் மனதை விட்டு அகல மறுக்கின்றனர்.

இவர்களின் குறும்பு ஒரு பக்கம் ரசிக்க வைத்தாலும் இவர்களின் ஆதங்கம், உணர்வுகள் நம்மை நிச்சயம் கட்டி போட வைக்கும்.

இவர்களில் யார் பெஸ்ட் என்று சொல்லும் முன்னே, மற்றவர் ஸ்கோர் செய்கிறார். ஆனால் இறுதியில், எவரும் எதிர்பாராத க்ளைமாக்ஸ் வைத்து கரையாத நெஞ்சங்களையும் கரைத்துவிடுகின்றனர் குட்டீஸ்.

ஒவ்வொரு குழந்தைகளும் நன்றாக நடித்துள்ளனர். இடையில் அர்ஜீன் அக்ஷ்ராவின் ஒரு சின்ன காதலும் வந்து போகிறது.

Kadha Solla Porom  movie image

பவன் இசையில் ஓரிரு பாடல்கள் கேட்கலாம். ஒளிப்பதிவு கூட ஓகேதான்.

மருத்துவமனைகளில் குழந்தைகள் திருடர்கள் நடப்பதும், நம்மை ஏமாற்றுவதும் எப்படி? என பெற்றோருக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார் இயக்குனர்.

படத்தின் க்ளைமாக்ஸை யாரும் யூகிக்க முடியாத படி தந்திருக்கிறார் இயக்குனர். இதை நாம் சொல்வது நல்லதல்ல.

க்ளைமாக்ஸ் உணர்வுப்பூர்வமான கவிதை. அதை உங்கள் கண்களே பார்த்து ஈரமான கவிதையை உணரட்டும்.

மொத்தத்தில் கத சொல்லப் போறோம்… கண்களின் ஈரமான கவிதை..!

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்