காதலும் கடந்து போகும் விமர்சனம்

நானும் ரவுடிதான் மற்றும் சேதுபதி தொடர் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் இப்படம் வந்துள்ளதால் ஹாட்ரிக் வெற்றி கொடுப்பாரா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதில் பிரேமம் நாயகியும் இணைந்துள்ளார். இவர்களின் லவ் கெமிஸ்ட்ரி எப்படி என்பதை பார்ப்போம்…

நடிகர்கள் : விஜய் சேதுபதி, மடோனா செபஸ்டியன், சமுத்திரக்கனி மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு : தினேஷ் கிருஷ்ணன்
படத்தொகுப்பு : லியோ ஜான்பால்
இயக்கம் : நலன் குமாரசாமி
தயாரிப்பாளர் : சிவி குமார் மற்றும் ஞானவேல்ராஜா

 

கதைக்களம்…

ஒரு ரவுடியிடம் சிறுசிறு வேலைகள் செய்துக் கொண்ட்டே அடியாளாக வேலை பார்க்கிறார் விஜய் சேதுபதி. இவர் வீட்டின் எதிர் வீட்டில் குறைந்த வாடகையில் தனியாக வசித்து வருகிறார் இன்ஜினியரிங் முடித்த மடோனா.

கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் வேலை செய்ய வேண்டும் என்பதை தன் லட்சியமாக கொண்டு வேலை தேடி வரும் மடோனாவுக்கு பல உதவிகளை செய்து வருகிறார் விஜய் சேதுபதி.

அதன் பின்னர் இவர்கள் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சுவாரஸ்யங்களே படத்தின் கதையோட்டம்.

கதாபாத்திரங்கள்…

கதிர் கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி. அலட்டிக் கொள்ளாத நடிப்பால் ரசிகர்களை அசத்தியிருக்கிறார். இவரை தவிர அந்த கேரக்டரில் எவராலும் நிற்க முடியாது.

சரக்கில் வாழைப்பழத்தை வைத்து சாப்பிடுவது முதல், அடி வாங்கிக் கொண்டு கூலிங் கிளாஸை அணிந்த படி வெளியே செல்வது என ஒவ்வொரு ப்ரேமிலும் தனித்து நிற்கிறார்.

சின்ன சின்ன விஷயங்களில் கூட படு யதார்த்தமாக தோன்றி ரசிகர்களின் கைத்தட்டலை அள்ளிவிடுகிறார் மனிதர்.

kadhalum kadanthu pogum movie stills

மடோனா… இவரும் யாழினி கேரக்டரை பெருமைப்படுத்தியிருக்கிறார். ஒரு மொக்கை காலேஜ்ஜில் படித்துவிட்டு வேலை தேடி அலையும் காட்சிகள் இன்றைய பெண்களில் மனநிலையை காட்டியிருக்கிறது.

வேலை தேடும் பெண் என்றால் படுக்க வேண்டுமா? படிப்பு மற்றும் திறமையை பார்க்க மாட்டீர்களா? என கேட்கும் காட்சிகள் நச். பயத்துடன் வாழும் அப்பாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சென்னை செல்லும் காட்சிகளில் பல பெண்களுக்கு முன்னுதாரணமாய் தெரிகிறார்.

இவர்களைத் தவிர படத்தில் நடித்த அனைத்து கேரக்டர்களுக்கும் பெரிதாக வாய்ப்பில்லை. சமுத்திரக்கனி கேரக்டர் உட்பட.

படத்தில் உள்ள சுவாரஸ்ய காட்சிகள்…

  • வீட்டு புரோக்கர் மற்றும் வீடு தேடும் பெண் வரும் காட்சிகள்…

ஓ இவர்தான் அந்த ரவுடியா?

உங்களுக்கு வீடு பிடிச்சிருக்கா?

இல்லை. பிடிக்கல.

அப்போ இவர்தான் அந்த ரவுடி.

  • ஆம்பளைங்க சரக்கடிச்சா நாங்க மட்டும் பார்த்துட்டே இருக்கனுமா?
  • தமிழ்நாட்ல எல்லாருமே இன்ஜினியர்தான்.. யார்தான் இன்ஜினியர் இல்லை?
  • மடோனாவின் அப்பாவிடம் நெட்வொர்க் மேனேஜர் என்று சொல்லிவிட்டு சமாளிக்கும் காட்சிகள்
  • இண்டர்வியூவை தள்ளிவைக்க சேதுபதி செய்யும் கலாட்டா

என ஆங்காங்கே வசனங்கள் மற்றும் காட்சிகள் படத்தை தாங்கி நிற்கின்றன.

Kadhalum kadanthu pogum movie photos

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஹவுஸிங் போர்ட்டு வீடுகளை அப்படியே அதன் தன்மை மாறாமல் காட்டிய ஒளிப்பதிவாளருக்கு ஒரு சல்யூட். ஐடி கம்பெனி, சென்னை பார்க் என அனைத்தையும் லைவ்வாக காட்டியிருக்கிறார்.

சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை மற்றும் பாடல்களும் கவிஞர்களின் பாடல் வரிகளும் படத்திற்கு பொருத்தமாய் இருக்கிறது. க க க கா போ பாடல் ரசிகர்களை தாளம் போட்டு ஆட வைக்கும்.

ஆனால் இதுபோன்ற பாடல்களை கண் மூடி கேட்டாலும் இது சந்தோஷ் நாராயணனின் பாடல்கள் என நிச்சயமாக சொல்லி விடலாம். ஒரே சாயலில் ஒரே மாதிரியான குரல்களில் அனைத்து படங்களிலும் பாடல்களை வருவதை தவிர்க்கலாமே சந்தோஷ் சார்.

படத்தின் ப்ளஸ்…

  • விஜய் சேதுபதி மற்றும் மடோனாவின் நடிப்பு
  • பன்ச் வசனம் இல்லையென்றாலும் மனதில் பச்சக் என்று ஒட்டிக்கொள்ளும் வசனங்கள்.
  • எந்த ஒரு இடத்திலும் ஹீரோ ஹீரோயின் டச் இல்லாமல் கதையை நகர்த்தியது.
  • ஆபாசம், வன்முறை இல்லாத ஒரு ரவுடிசம் கலந்த காதல் படம்.

படத்தின் மைனஸ்…

  • சின்ன சின்ன விஷயங்கள்தான் சுவாரஸ்யம் என்றாலும் அதற்காக பல காட்சிகளை பொறுமையாக நகர்த்தியிருக்க வேண்டாமே.

madonna sebastian in kadhalum kadanthu pogum

ஹீரோ + ஹீரோயின் ஒன்றாக சுற்றினாலும் இருவருக்குள்ளும் காதலை காட்டாமல் கதையை நகர்த்தியிருப்பது இயக்குனரின் டைரக்ஷன் டச். கதை பெரிதாக இல்லையென்றாலும் அதனை கொண்டுச் சென்ற நலன்குமரசாமிக்கு சபாஷ் சொல்லலாம்.

மொத்தத்தில் காதலும் கடந்து போகும்… ரசிகர்கள் மனதில் நிற்கும்.

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்