களம் திரை விமர்சனம்

நடிகர்கள் : ஸ்ரீநிவாசன், அம்சத், லக்ஷ்மி ப்ரியா சந்திரமௌலி, மதுசூதன் ராவ், நாசர், பூஜா, கனி குஸ்ருதி, பேபி ஹியா, ரேகா சுரேஷ் மற்றும் பலர்.
இசை : பிரகாஷ் நிக்கி
ஒளிப்பதிவு : முகேஷ் G
படத்தொகுப்பு : பிரபாகர்
கதை, திரைக்கதை, வசனம் : சுபிஷ் சந்திரன்
இயக்கம் : ராபர்ட் S ராஜ்
பிஆர்ஓ : சுரேஷ் சந்திரா
தயாரிப்பாளர் : அருள் மூவிஸ்

கதைக்களம்…

மதுசூதனன் ஒரு லோக்கல் தாதா. எல்லாரையும் மிரட்டி அவர்களது சொத்துக்களை அபகரிப்பது வழக்கம். இதுபோல் தன் மகன் அம்ஜத்துக்காக ஒரு பாழடைந்த மாளிகையை பெறுகிறார்.

வீட்டை புதுப்பிக்கும்போது அந்த வீட்டின் தோட்டத்தில் உள்ள இருவரின் சமாதிகளை இடித்து விடுகின்றனர். அதன் பின்னர் அம்ஜத், தன் மனைவி லட்சுமி ப்ரியாவுடன் அந்த வீட்டில் குடியேற அந்த வீட்டினுள் என்ன நடைபெறுகிறது என்பதுதான் கதை.

 கேரக்டர்கள்…

அறிமுக காட்சியிலே மதுசூதனன் அசத்தலாக வருகிறார். மிரட்டுவதில் பளிச்சிடுகிறார். இவரது மகன் அம்ஜத்கான் இன்னும் பயத்தை தன் முகத்தில் கொண்டு வந்திருக்கலாம்.

லட்சுமி ப்ரியா தன் கண்களில் பயத்தை அருமையாக உணர்த்தியுள்ளார். இவர்களுக்கு ஏதாவது ரொமான்ஸ் கொடுத்திருக்கலாம்.

நகுலன் கேரக்டரில் வரும் ஸ்ரீனி தன் உடற்கட்டை காட்டும்போது நிச்சயம் ஆக்ஷன் இருக்கும் என்று பார்த்தால் ஒன்றுமில்லை.

பூஜாவுக்கு பெரிதாக வேலையில்லை. கனி, பேபி ஹியா ஆகியோரும் படத்தில் உண்டு.

படம் முடியும் நேரத்தில் வருகிறார் நாசர். மேஜிக் மேனாக வந்து அவரும் உடனே மறைந்தும் போகிறார்.

டெக்னீஷியன்கள்…

படத்தில் காண்பிக்கப்படும் ஒவ்வொரு கலைப்பொருளும் யார் அந்த ஆர்ட் டைரக்டர் என கேட்க தோன்றுகிறது. கலை இயக்குனர் செந்தில் ராகவனை பாராட்டி கை குலுக்கலாம்.

அதுபோல் முகேஷின் ஒளிப்பதிவு அருமை. பேய் மாளிகையும் ப்ளாஷ் பேக் காட்சிகளும் கண்களும் விருந்து.

பின்னணி இசை சில இடத்தில் பளிச்சிடுகிறது.

படத்தின் ப்ளஸ்…

  • க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்
  • படத்தின் மிகப்பெரிய பலம் கலைப் பொருட்கள். செந்தில் ராகவன் அந்த பொருட்களை எப்படிதான் தேர்ந்தெடுத்தாரோ?
  • சின்ன சின்ன சப்தம் கூட பின்னணி இசையில் மிரட்டுகிறது

படத்தின் மைனஸ்…

  • வீடு முழுவதும் லைட் எரிந்தாலும் மெழுகு வர்த்திகள் ஏன்..? அதுவும் ஸ்டோர் ரூமில் லைட் வேண்டாமா?
  • பொறுமையை சோதிக்கும் நீளமான காட்சிகள்.
  • சின்ன குழந்தையை தனியாக படுக்க வைப்பார்களா பெற்றோர்கள்..? அதுவும் அந்த வீட்டில் மர்மமான உருவம் இருக்கும்போது.
  • பாடல்கள், காமெடி மற்றும் ரொமான்ஸ் இல்லாதது பெரும் குறை.
  • சொல்லி வைத்த மாதிரியே ஹீரோயின் நாசர் குடும்பத்தை தேடிச் செல்வது.

பேய் படம் போல் முழுபடத்தையும் கொடுத்து, க்ளைமாக்ஸில் ட்விஸ்ட் கொடுத்திப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம். ராபர்ட் ராஜின் இந்த புதிய முயற்சிக்கு ஒரு பொக்கே.

மொத்தத்தில்… உருவத்தை காட்டி மிரட்டும் களம்..!

 

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்