கணிதன் விமர்சனம்

ஈட்டி படத்திற்கு பிறது அதர்வாவின் படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கணிதன் படம் கல்வி சான்றிதழ் குறித்த படம் என்பதால் மாணவர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த கணிதன் அந்த எதிர்பார்ப்புகளை எப்படி எதிர்கொண்டுள்ளார் என்பதை பார்ப்போம்..

நடிகர்கள் : அதர்வா, கேத்ரீன் தெரசா, தருண் அரோரா, பாக்யராஜ், கருணாகரன், மனோபாலா, ஒய் ஜி மகேந்திரன், ஆடுகளம் நரேன் மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : ‘டிரம்ஸ் சிவமணி
ஒளிப்பதிவு : அரவிந்த் கிருஷ்ணா
படத்தொகுப்பு : புவன் ஸ்ரீனிவாஸ்
இயக்கம் : டி. என். சந்தோஷ்
தயாரிப்பாளர் : தாணு

 

கதைக்களம்…

ஸ்கை டிவி என்ற மொக்கை சேனலில் ரிப்போர்ட்டராக வேலை பார்க்கிறார் அதர்வா. பிபிசி சேனலில் வேலைக்கு சேர்வதே லட்சியமாக கொண்டு முயற்சிக்கிறார்.

ஒரு நாள் அங்கு வேலை கிடைத்து சேர இருக்கும் நிலையில், இவர் படித்து வாங்கிய சர்ட்டிபிகேட்ஸ் அனைத்தும் போலி என்றும், அதனை வைத்து இவர் கோடிக்கணக்கில் வங்கியில் லோன் பெற்றுள்ளதாக போலீஸ் இவரை கைது செய்கிறது.

யாரோ ஒருவர் தன் பெயரில் செய்த டூப்ளிகேட் சர்ட்டிபிக்கேட்டுக்கு தான் ஏன்? பலிகடா ஆக வேண்டும் என நினைகும் அதர்வா. அந்த மோசடி கும்பலை பிடிக்க அவதாரம் எடுக்கிறார் அதன்பின் என்ன ஆகும் என்பதெல்லாம் உங்களுக்கே தெரிந்த கதைதான்.

கதாபாத்திரங்கள்…

அதர்வாவை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். இவரது வயது உள்ள ஹீரோக்கள் எல்லாம் ஊர் சுற்றிக் கொண்டு வேலையில்லாமல் தம் அடித்து திரிவது போல இல்லாமல் படத்திற்கு படம் வித்தியாசமான ரோல்களை தேர்ந்தெடுத்து வருகிறார். அதில் தன் கேரக்டரை மெருகேற்றியும் இருக்கிறார். சபாஷ் அதர்வா.

விறுவிறுப்பான திரைக்கதைக்கு இவரது வேகமும் கைகொடுத்திருக்கிறது. கணிதன் என்பதாலோ என்னவோ இவருக்கும் கேத்ரீன் தெரசாவுக்கும் கெமிஸ்டரி சுத்தமாக இல்லை.

ஒரு காட்சியில் கேத்ரீன் ப்ரெண்ட்ஸ் இவரை சுற்றி நிற்க.. “எல்லா பெண்களையும் ஒரே நேரத்தில் எப்படி.?” என கேட்கும்போது ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

என்னதான் ரிப்போர்ட்டராக இருந்தாலும் வில்லன் நெட்வொர்க்கை உடனே உடனே கண்டுபிடிப்பதில் லாஜிக் இல்லை.

kanithan team

வில்லன் போடும் திட்டங்களை ஹீரோ கண்டுபிடிப்பதும், ஹீரோ போடும் திட்டங்களை வில்லன் கண்டுபிடிப்பதும் ஏதோ சொல்லி வைத்து செய்தது போல் இருக்கிறது.

மெட்ராஸில் பார்த்த கேத்ரீன் இதில் நிறையவே மாற்றத்துடன் காணப்படுகிறார். அதாவது சைஸிஸ். நடிப்பில் பெரிய வேலையில்லை. உதடு அழகாலும், கண்களாலும் ஆடை கவர்ச்சியாலும் நம்மை கவர்கிறார்.

வில்லன் தருண் அரோரா சைலண்டாக வந்து வைலண்டாக மிரட்டியிருக்கிறார். இனி வாய்ப்புகள் நிச்சயம் தேடி வரும். வில்லனின் மகனாக வருபவர் போடும் சண்டைக் காட்சிகள் ஆக்ஷன் ப்ரியர்களின் ட்ரீட்.

போலீஸ் பாக்யராஜ், ஹீரோ அப்பா நரேன், ஹீரோயின் அப்பா மனோபாலா, வழக்கறிஞர் கருணாகரன், ஒய் ஜி மகேந்திரன் என நல்ல திறமைசாலிகள் கிடைத்தும் பெரிய வேலை இல்லை. நாங்களும் இருக்கிறோம் என சில காட்சிகளில் வந்து நினைவுப்படுத்துகிறார்கள்.

கும்கி அஸ்வினுக்கு காட்சிகள் இல்லை என க்ளைமாக்ஸில் இயக்குனர் நினைத்திருப்பார் போல. அதன்பிறகு அவருக்கு காட்சிகளை கொடுத்து, நம்மை சோதித்து விடுகிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவின் பங்கு பெரியளவில் பேசப்படும். விறுப்பான திரைக்கதையில் ஒன்ற வைக்கும் த்ரில் காட்சிகள் கண்களுக்கு விருந்து. சேஸிங் காட்சிகளில் இவரது ஸ்பீட் பாஸ் மார்க்.

Kanithan couples

பின்னணி இசை அளவு பாடல்கள் பேசவும் படாது…. பாடவும் படாது. இசையமைப்பாளர்தான் இப்படி செய்துவிட்டார் என்றால் எடிட்டர் புவன் ஸ்ரீனிவாஸ் நம் பொறுமையை ரொம்பவே சோதித்து விட்டார். இனிவரும் நாட்களில் காட்சிகளை எடிட் செய்தால் கணிதன் ரசிகர்களால் இன்னும் கவனிக்கப்படுவான்.

படத்தின் ப்ளஸ்…

  • மீடியா பலம்
  • போலி சான்றிதழ் விழிப்புணர்வு
  • விறுப்பான திரைக்கதை
  • பின்னணி இசை

படத்தின் மைனஸ்…

  • ஹார்ட் டிஸ்கை கண்டுபிடித்தபின் கதையை இழுப்பது
  • 4வது படித்த கும்கி அஸ்வின் கம்ப்யூட்டரை ஆப்ரேட் செய்து படிப்பது
  • செவிகளில் கூட ஒட்டாத பாடல்கள்

ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் என்பதை அடிக்கடி நினைவுப்படுத்துகிறார் இயக்குனர் சந்தோஷ். வில்லன் ஹீரோவை தேடி வரும் காட்சி, ஹீரோ வில்லனை தேடி வரும் காட்சி என இரண்டையும் சேர்த்து ட்விஸ்ட் வைத்திருப்பது அருமை.

மொத்தத்தில் ‘கணிதன்’… கவனிக்கப்பட வேண்டியவன்.!

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்