கதகளி விமர்சனம்

‘பாயும் புலி’யில் பாய்ச்சலை தவறிய விஷால் தற்போது கதகளி ஆட வந்துள்ளார். நடிகர் சங்கம் + வெள்ள நிவாரண பணிகள் என பிஸியாக இருந்தும் ‘கதகளி’யை சொன்னப்படி சரியான நேரத்தில் கொடுத்துள்ளார். அவரின் ஆட்டம் எப்படி என்பதை பார்ப்போமா?

நடிகர்கள் : விஷால், கேத்ரீன் தெரசா, கருணாஸ், லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா
ஒளிப்பதிவு : பாலசுப்ரமணியம்
படத்தொகுப்பு : பிரதீப் ராகவ்
இயக்கம் : பாண்டிராஜ்
தயாரிப்பாளர் : விஷால் + பாண்டிராஜ்

கதைக்களம்…

கடலூரிலுள்ள கடலோர கிராமங்களின் மீனவத் தலைவனாக தம்பா. மீன்களை எக்ஸ்போர்ட் செய்து வந்தாலும் இவர் சொல்வதுதான் அந்த ஊரின் சட்ட திட்டம் எல்லாம். ஊரில் இவருக்கு பல எதிரிகள் இருக்க, விஷாலின் குடும்பமும் அதில் ஒன்று.

ஆனால் பிரச்சினைகளை விரும்பாத விஷால் வெளியூரில் இருக்கிறார். பின்னர் நாயகி கேத்ரினை மணமுடிப்பதற்கா விஷால் கடலூர் வருகிறார். இந்நிலையில் தம்பா கொல்லப்பட விஷாலின் அண்ணன் மைம் கோபி, விஷாலின் நண்பர்கள் உள்ளிட்டோர் மீது போலீசின் சந்தேக பார்வை விழுகிறது. விசாரணை நீடித்துக் கொண்டே போக, வழக்கை முடிக்க விஷால் இறங்கி ஆடும் ஆக்ஷன் ஆட்டமே கதகளி.

கதாபாத்திரங்கள்…

விஷாலுக்கு ஏற்ற ரெடிமேட் கேரக்டர் இது. செம பிட்டாக இருக்கிறார். பிரச்சினைகளை கண்டு ஒதுங்குவதும் பின்னர் இறங்கி அடிப்பதும் அவருக்கு கைவந்த கலைதானே. பின்னி எடுத்து இருக்கிறார்.

தனது முந்தைய படங்களை விட இதில் நல்ல மெச்சூராக இருக்கிறார் கேத்ரீன். காதல் குறும்புகளை ரசிக்க வைக்கிறார்.

காமெடிக்கு  கருணாஸ் மற்றும் இமான் அண்ணாச்சி. ஆங்காங்கே தங்கள் பங்களிப்பால் பணிகளை நிறைவு செய்கிறார்கள். விஷாலின் அண்ணனாக மைம் கோபி. பாசத்தையும் தன் ஆதங்கத்தையும் தன் நடிப்பில் அருமையாக வெளிப்படுத்தியுள்ளார். ஜெயப்பிரகாஷ் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் அனுபவ நடிப்பை அருமையாக வெளிப்படுத்தியுள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

அழகே…. பாடல் அடிக்கடி கேட்க வைக்கும் ரகம். மற்றவை ஓகே. ஆனால், பின்னணி இசையில் கை கொடுத்துள்ளார் ஹிப் ஹாப் தமிழா. பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவில் காட்சிக்களுக்கான விறுவிறுப்பு பற்றி கொள்கிறது. டைட்டில் கார்டு  கிராபிக்ஸ் அசத்தல். இதுவே படத்திற்கான மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கும்.

படத்தின் பிளஸ்…

  • ட்விஸ்ட் தரும் திரைக்கதை
  • ஆக்ஷன் + விறுவிறுப்பு
  • இரண்டாம் பகுதியின் காட்சிகள்

படத்தின் மைனஸ்…

  • எதிர்பார்த்த சில காட்சிகள்

தன்னுடைய இயக்கத்தில் ஒரு மாறுபட்ட கதையை கொடுத்திருக்கிறார் பாண்டிராஜ். தன் நண்பரின் உண்மை சம்பவத்திற்கு கமர்ஷியல் வண்ணம் கொடுத்து விருந்து படைத்திருக்கிறார்.

மொத்தத்தில் கதகளி… ஆக்சன் அவதாரம்..!

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்