கத்துக்குட்டி விமர்சனம்

பல போரட்டங்களுக்கு பிறகு ‘கத்துக்குட்டி’ இன்று வெளியாகியுள்ளது. அதுபோல நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் நரேன் தோன்றியுள்ளார். இவருடன் சூரி, ஸ்ருஷ்டி… இந்த கூட்டணியில் வந்திருக்கும் ‘கத்துக்குட்டி’ என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்…

நடிகர்கள் : நரேன், ஸ்ருஷ்டி டாங்கே, சூரி, பாரதிராஜா சகோதரர் ஜெயராஜ், காதல் சந்தியா மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : அருள் தேவ்
ஒளிப்பதிவு : சந்தோஷ் ஸ்ரீராம்
இயக்கம் : இரா. சரவணன்
தயாரிப்பாளர் : ஓன் புரொடக்ஷன் ராம்குமார்

கதைக்களம்…

ஊரில்அரட்டையடித்து கொண்டு ஜிஞ்சர் சூரியுடன் திரிகிறார் அறிவழகன் நரேன். இவரின் தந்தை ஜெயராஜ் தேர்தலில் போட்டியிட 40 வருடமாக அலைகிறார். ஆனால் இறுதியில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவே நரேனுக்கு அந்த வாய்ப்பு வருகிறது.

இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள் ஸ்ருஷ்டி. மீத்தேன் வாயு எடுக்க விளை நிலங்களை வளைத்து போடும் அதிகார வர்க்கத்திடமிருந்து விவசாயத்தை மீட்க ஒரு கட்டத்தில் உயிரை விடுகிறார் ஸ்ருஷ்டி தந்தை. ஆனால் அரசியல்வாதிகள் பழியை நரேன் மீது போடுகின்றனர். அதன்பின்னர் நரேன் தேர்தலில் வென்றாரா? விவசாயிகளின் நிலைமை என்ன ஆனது? ஸ்ருஷ்டி நரேன் என்ன ஆனார்கள் என்பதே மீதிக் கதை.

கதாபாத்திரங்கள்…

நரேன் தாடி வைத்து சோகமாக இருந்தாலும் தன் நடிப்பில் பளிச்சிடுகிறார். அடிதடியிலும், கருத்து சொல்வதிலும், ஓட்டு கேட்பதிலும் பாஸ் மார்க் பெறுகிறார். இவரும் சூரியும் சேர்ந்து செய்யும் கலாட்டக்கள் நச் ரகம்.

சூரி இப்படத்தில் அதிகம் ஸ்கோர் செய்துள்ளார். அதற்கு காமெடி வசனங்கள் மிக்க பலம். காமெடி காட்சியிலும் கருத்து சொல்வதிலும் தனிமுத்திரை பதித்துள்ளார்.

ஸ்ருஷ்டி… அழகுடன் கூடிய அருமையான நடிப்பு. தந்தை மீது பாசம் காட்டுவதும்.. இயற்கையின் ஒவ்வொன்றையும் ரசித்து சொல்வது தனி கவிதை. இவர் சொல்ல கேமராவும் கவி பாடும் காட்சிகள் அருமை.

இவர்களுடன் வரும்… நரேன் தந்தை + தாய், ஸ்ருஷ்டியின் தந்தை, அரசியல்வாதி மாவட்டம், ஊமையான கார் டிரைவர் என பலரும் தன் பாத்திரம் அறிந்து உணர்வுபூர்வமாக நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தின் பாடல் நன்றாக இருந்தாலும் காதல் சந்தியாவின் பாடல் தேவையா? கிராமத்து பாடல்கள் கேட்கலாம். தந்தை மகள் பாடல் வரிகள் அருமை. ஒளிப்பதிவாளரின் கைவண்ணம் பாராட்டும்படியாக உள்ளது. கிராமத்து வீடுகளின் அழகை அருமையாக மாற்றம் செய்யாமல் தந்திருக்கிறார்.

படத்தின் ப்ளஸ்

  • படத்தின் க்ளைமாக்ஸ் அருமை
  • வசனகர்த்தாவுக்கு ஒரு சல்யூட்.
  • மீத்தேன் வாய் பற்றி அருமையான கிராபிக்ஸ்
  • படத்துடன் கூடிய காமெடி காட்சிகள்
  • ஒளிப்பதிவாளரின் கேமரா கவிதை

படத்தின் மைனஸ்

  • ஒயின்ஷாப் காட்சிகள்
  • கொஞ்சம் நீளமான இரண்டாம் பகுதி

ஒரு அருமையான கருத்துள்ள படத்தை கமர்ஷியல் ஐட்டங்கள் கொடுத்து ரசிக்கும்படி தந்திருக்கிறார் இயக்குனர் இரா. சரவணன். அதுவும் பாமர மக்களும் ஐடி துறையினரும் புரியும்படி சொன்னதற்கு ஒரு பெரிய சபாஷ். க்ளைமாக்ஸ் வசனம் சூப்பர்.

சில இடங்களில் நாடக தன்மை இருப்பதை குறைத்திருக்கலாம். படத்தின் டைட்டில் போடும்போதே குடியை தவிர்க்க முடியவில்லை என்ற சொன்னதற்காக படத்தில் இவ்வளவு காட்சிகளா?

மொத்தத்தில் ‘கத்துக்குட்டி’ : நல்லதை கத்து கொடுக்கிற குட்டி!

Kathukkutti Movie Review in English

Diffusé par Adcash

இது தொடர்பான செய்திகள்